பிறை

அபூ ஃபாத்திமா மவ்லவிகளின் வீண் பிடிவாதம்! பிறையைக் கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் இந்த மவ்லவிகள், கணக்கீட்டின் மூலம் மாதம் பிறப்பதை உறுதியாக அறிய முடியும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் பிறை தென்படும் என்று கணக்கீட்டின்படி அறிவித்தால் நிச்சயமாக அந்த நாளில் அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் பிறை இருக்கும். மேகமூட்டத்தால் மறைக்கப்பட்டாலும் பிறை இருந்தே தீரும் என உறுதியாகச் சொல்கிறார்கள்.

பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்! கு. நிஜாமுதீன் பிறைகள் பற்றி குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம் : பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். “அது” (அதாவது ஹிலால்) மக்களுக்கு காலம் காட்டுகின்றது. குர்ஆன்: 2:189 பிறைகள்மக்களுக்கு காலம் காட்டுபவை என்று இறைவன் இங்கு குறிப்பிடுகிறான். இது முஸ்லிம்களுக்கு மட்டும் காலம் காட்டவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் காலம் காட்டுபவை. இன்றும் உலகில் பல சமூகங்கள் பிறை களை நாள்காட்டியாக பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு […]

S.H. அப்துர் ரஹ்மான் அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நாம் பயன்படுத்தும் ஹிஜ்ரி காலண்டரை கணக்கிட பயன்படுத்தும் IDL மற்றும் UTC போன்ற அளவீடுகள் ஆங்கிலேயரால் நிர்ணயிக்கப்பட்டவை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்தவைகள் அல்ல என்று ஏற்கனவே இரண்டு ஆக்கங்களில் பார்த்தோம். செப்டம்பர் 2018 அந்நஜாத்தில் IDL பற்றியும் டிசம்பர் 2018 அந்நஜாத்தில் UTC பற்றியும் விளக்கமாக பார்த்தோம். அதில் உள்ள சந்தேகங்கள் பற்றி ஹிஜிரி கமிட்டி இடமும் கேள்விகள் கேட்டு இருந்தேன். அதற்கும் இது நாள் வரை அவர்களிடம் இருந்து எந்த பதிலையும் பெறமுடியவில்லை. இவைகள் இஸ்லாமிய அடிப்படையிலும் […]

நாளின் ஆரம்பம்… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. பிப்ரவரி 2019 தொடர்ச்சி…. v சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக முற்பகல் மீது சத்தியமாக பகலின் மீதும் சத்தியமாக இரவின் மீதும் சத்தியமாக. (91:1,3,4, 93:1) v ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது ஒருமுறை நாங்கள் கலீஃபா உமர் (ரழி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது கடலலை போன்று அடுக்கடுக்காக ஏற்படும் அரசியல் குழப்பங்கள் பற்றிய நபி(ஸல்) அவர்களது முன் அறிவிப்பு பற்றி அறிந்தவர் உங்களில் யார்? என்று கேட்டார்கள் மூஃமின்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜனவரி 2019 தொடர்ச்சி…. * ஹாஜிகள் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அரஃபா மைதானத்தில் தங்கி அங்கு லுஹர் அசர் தொழுகைகளைத் தொழுது மஃரிப் நேரமானதும் முஜ்தலிபாவிற்குச் சென்றால் தான் அது பரிபூரணமான ஹஜ்ஜாக அமையும் ஆனாலும் ஹஜ்ஜுக்காக வந்தவர்களுக்கு ஏதோ இடையூறு காரணமாக பிறை ஒன்பதாவது பகல் பொழுதில் அரஃபா மைதானத்தை அடைய முடியவில்லை. ஆயினும் அன்றைய மஃரிபுக்குப் பிறகானாலும் அல்லது ஃபஜ்ருக்குளேனும் அரஃபா மைதானத்தை அடைந்து அங்கு சிறிதள வேனும் தங்கிவிட்டு […]

நாளின் ஆரம்பம்… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “நேற்று என்பதும், இன்று என்பதும், நாளை என்பதும், ஒருபோதும் ஒன்றல்ல” அதுபோலவே கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய இவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல வெவ்வேறானவை தான். எம்மை விட்டும் கடந்து சென்ற நேற்றைய தினம் என்பது வேறு, பொழுது புலர்ந்துள்ள எமது இன்றைய தினம் என்பது வேறு. நாம் எதிர்பார்த்திருக்கும் நாளைய தினம் என்பது வேறு என்பதாகவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் என்பதற்கான […]

ஆங்கிலேயர் நிர்ணயம் செய்த  (UTC) (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்) இஸ்லாமிய அடிப்படையா? அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சந்திரனை கணக்கிட்டு காலண்டர் போட்டு அதன் அடிப்படையில் அமல்கள் செய்து வருகின்றோம். கணக்கீடு நவீன அறிவியல் உலகில் மனிதர்களால் முடிந்த வரை துல்லியமான முறையில் கணக்கிட முடியும். (அல்லாஹ்வின் துல்லியம் என்பது இறுதியானது) அதன்படி கணக்கிட்டு வருகிறோம். இதற்காக உலக நடைமுறையில் உள்ள தேதிக்கோடு IDL உலக நேரம்  UTC ஆகிய உலகம் நியமனம் செய்த அளவீடுகளை […]

நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா மஃறிபா?

ஆங்கிலேயர் போட்ட தேதிகோடு (IDL) இஸ்லாமிய அடிப்படையா? S.H. அப்துர் ரஹ்மான், திருச்சி அன்பு சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சந்திரனை கணக்கிட்டு காலண்டர் போட்டு அதன் அடிப்படையில் அமல்கள் செய்து வருகின்றோம். கணக்கீடு நவீன அறிவியல் உலகில் மனிதர்களால் முடிந்த வரை துல்லியமான முறையில் கணக்கிட முடியும். (அல்லாஹ்வின் துல்லியம் என்பது இறுதியானது) அதன்படி கணக்கிட்டு வருகிறோம். இதற்காக உலக நடைமுறையில் உள்ள தேதிக்கோடு IDL உலக நேரம் UTC ஆகிய உலகம் நியமனம் செய்த அளவீடுகளை […]

கணிப்பீடு! கணிப்பீடு!!! கணிப்பீடு!!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “சந்தேகம்’ என்பதற்குத் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை 49:12 அது போன்றே சந்தேகங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுமானம், அன்னளவு, யூகம் தோராயமானது. குத்துமதிப்பு போன்றவற்றுக்கும் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை என்பதனை பரிசுத்த அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது. உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத வி­யங்களை நீர் பின்பற்ற வேண்டாம். 17:36 பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்கமாக விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். 49:06 இன்னும் […]

பிறை பற்றி! ஆலிம்களிடம் (மார்க்க அறிஞர்களிடம்) ஒரு அவாமின் (பாமரனின்) கேள்வி? M. சையித் முபாரக் நாகை. பால் கொடுக்கும் தாய்மார்கள் நோன்பு பிடிப்பது பற்றிய சட்டத்தில் ஐந்துவித கருத்துகள் ஆலிம்கள் மத்தியில் இருக்கின்றனவாம். பிறைப் பற்றியும் இரு கருத்துகள் இருக்கின்றன. 1. தத்தமது பகுதி பிறை, 2.பிறை பார்த்த தகவல் முன்பே கணக்கிடப்பட்ட  நேரத்தில், அதே நேரத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்படியிருக்கும்போது பிறைக் கணக்கீடு முறையும் சரியாகத்தானே இருக்கும். அதனை ஏற்று ஒரே […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. காலமாறுதலினாலும் கலியுகம் தோன்றியதாலும் கணிணி வடிவ உலகமானதாலும் அதி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம் காரணமாக நேரடி அர்த்த முள்ளதும் மறைமுக அர்த்தமுள்ளதுமான எத்தனையோ குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களும் இவர்களால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் பிறை விஷயத்தில் மாத்திரம் பலபொருள் கொண்ட ஸூமுலி ருஃயத்திஹி வ அப்ஃதிரூலி ருஃயத்திஹி பிறையைப் பார்த்துப் பிடியுங்கள், பிறையைப் பார்த்து விடுங்கள் என்ற ஹதீஃதிற்கு மாத்திரம் தவறான அர்த்தம் கற்பித்துத் […]

எஸ். ஹலரத் அலி. திருச்சி- 7. அன்றைய ஜாஹிலியா கால அரேபியாவில் ஆண்டுமானமானது, இப்ராஹீம் (அலை) நெருப்பில் இடப்பட்ட நாளையும், பின்னர் காபத்துல்லாஹ் கட்டிய நாளையும், ஆண்டு மானங்களாக வைத்து கணக்கிட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு  ஏற்பட்டது. பின்னர், காப் இப்னு லுஆவின் மரணத்தை, யானையாண்டு வரை ஆண்டுமானமாகக் கொண்டார்கள். பின்னர் ஹிஜ்ரி ஆண்டு வரை யானையாண்டே அவர்களின் ஆண்டுமானமாக இருந்து வந்தது. அரபுகளில் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பிரபல்யமான நிகழ்வுகளை வைத்து வரலாற்றை உறுதிப் படுத்தினர். […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் (முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் (வந்து விடுவார்கள்) என்று நீங்கள் நினைக்கிறீரகளா? (அதுதான் இல்லை) இவர்களில் ஒரு சாரார். அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக்கூடியவர்கள். 2:75 மற்றொரு சாரார், எழுதப் படிக்கத் (தெரிந்த மற்றும்) தெரியாதவர்கள் ஆவர். அவர்களுக்கு நெறிநூலைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம்  இருப்பதெல்லாம் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான். மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். 2:78 அபூ […]

 ஹலரத் அலி, திருச்சி-7. மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதீஃதின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும். பிறை பார்த்தலுக்கான ஹதீஃதை பார்ப்போம். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) புகாரி, 1900,1906, முஸ்லிம் 1958. இது […]

ஷக்குடைய (சந்தேகத்திற்குரிய) நாள் உண்டா? S. முஹம்மது சலீம், ஈரோடு வருகிற 16.05.2018 அன்று ஷக்குடைய நாளாக இருப்பதால் இன்று மட்டும் இஷாத் தொழுகை 9.30 மணிக்கு நடைபெறும் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகளில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். ­ஷஃபான் மாதத்தின் இருபத்தொன்பதாவது நாளின் மஃரிபுக்கு பிறகு ஷக்குடைய நாள் ஆரம்பமாகிறது இந்த நேரத்தில் பிறை தகவல் குறிப்பிட்ட எல்லையிலிருந்து வருகிறதா என்று எதிர்பார்க்க வேண்டும். பிறை தகவல் வந்துவிட்டால் ரமழான் மாதம் ஆரம்பித்துவிட்டது. பிறை […]

நம்மில் பலர் பிறை பார்ப்பது என்றால் மாத கடைசி தேதியில் மட்டும் மேற்கே பார்ப்பது என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். உண்மை அதுவல்ல. நபி(ஸல்) காலத்தில் மாதம் முழுவதும் தினமும் அஹில்லாக்களை பார்ப்பார்கள் அதிலும் ரமழான் மாதத்திற்கு முந்தய மாதம் முழுவதும் மற்ற மாதங்களை விட கவனமாக பார்ப்பார்கள் என்பதை இந்த ஹதீஃத் உறுதி செய்கிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ­ஷஃபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட பிறகு […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் “”…அவர்களில் ஒரு சாரார், அல்லாஹ் வின் வசனங்களைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக் கூடியவர்கள்” 2:75 மேலும், அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர். கட்டுக்கதைகளை (அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர நெறிநூலை அறிந்து வைத்திருக்கவில்லை, மேலும், அவர்கள் (வீண்) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. 2:78  மறைந்த அபூ அப்தில்லாஹ் அவர்கள் பிறை, கணக்கீடு, நாளின் துவக்கம் குறித்து பீ.ஜே. ஜமாஅத்திடம் 46 கேள்விகள் கேட்டிருந்தார்கள். வெகுநாட்களாக அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், […]

அபூ ஃபாத்திமா அல்குர்ஆனில் 16 இடங்களில் அல்லாஹ் “”உலில் அல்பாப்” என்று கூறி இருக்கும் உண்மையான ஆலிம்கள் அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கும் கட்டளைக்கு அணுவளவும் மாறாமல் அப்படியே அடிபணிவார்கள். அவர்கள் 36:21, 2:79,174,175, 31:6 இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரி லாகி, குர்ஆன் போதனைகளுக்கு முரணாக தங்கள் கைகளால் இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிஸி, பிக்ஹ், தஃப்ஸீர் என்ற பெயர்களால் கற்பனைக் கட்டுக் கதை களை எழுதி வைத்துக் கொண்டு, […]