நபிமார்களின் வாரிசுகள் என்போர் பிறை விஷயத்தில் கவனம் செலுத்துவார்களா? [PDF]
பிறை
பிறை நாள்காட்டியின் அத்தியாவசியம் குறித்த ஆய்வு மற்றும் கருத்தரங்கம்!! நாள்: 14.11.2012 இடம்: L.KS. மஹால். (அரிஸ்டோ) 2,திண்டுக்கல் ரோடு, திருச்சி தொலைபேசி:0431-2415859
அபூ அப்தில்லாஹ் 1999 நவம்பர் & டிசம்பர் , அல்முபீன் இதழில் சர்வதேச பிறையை ஏற்கக்கூடாது. தத்தம் பகுதியில் பிறை பார்த்தே நோன்பை ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்று எழுதி இருந்தார் தவ்ஹீத் மவ்லவி, அதற்கு முன்னர் 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழில் அப்போதைய அதன் ஆசிரியராக இருந்த இதே தவ்ஹீத் மவ்லவி, அவரது பெயரிலேயே ஓர் அறிவிப்புச் செய்திருந்தார். அதில் அப்போதைய 11 தவ்ஹீத் மவ்லவிகள் (JAQH & TNTJ) அனைவரும் ஐந்து அமர்வுகளில் அலசி […]
விமர்சனம்: அந்நஜாத் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக (கால் நூற்றாண்டு) சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுகிறது. ஆயினும் இது நாள் வரைக்கும் அதன் இலக்கை அடைய முடியவில்லை. எனவே தான் ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இயக்கங்கள், சங்கங்கள், கழகங்கள் என்ற பெயர்களில் பிளவுபட்டுக் கிடக்கிறோம். உதாரணத்திற்கு பிறை விஷயத்தில் 1. கணினி கணக்கீடு அடிப்படையிலும் 2. சர்வதேச அடிப்படையிலும் 3. நேரடியாக (Naked eye) பார்த்து
M.ஜமாலுத்தீன், நாகர்கோவில், 9894932446 அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, உங்கள் கவனத்திற்கு, நாம் நமது அறிவைப் பயன்படுத்தாமல் நம் தலைவர்களையும், இமாம்களையும், அமைப்பு அமீர்களையும் பின்பற்றி வருகிறோம், இது சரியா? அல்லாஹ் தனது நெறிநூலில் நம்மை சிந்திக்கச் சொல்கிறான். மறுமையில் அல்லாஹ்விடம் தன்னந் தனியாக நிற்கும்போது இமாம்களோ, தலைவர்களோ, அமீர்களோ நமக்காக பரிந்து பேச முடியாது. அல்லாஹ் கூறுகிறான்.
அபூ அப்தில்லாஹ் தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் குர்ஆன், ஹதீஸை கரைத்துக் குடித்த மேதைகள் எனக் கூறும் மதகுருமார்கள் அனைவரும் ஏகோபித்துப் பிறையைக் கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு அவர்கள் கொடுக்கும் ஆதாரம் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். பிறை பார்த்து நோன்பை முடியுங்கள். பிறை பார்க்காமல் நோன்பை ஆரம்பிக்காதீர்கள்; பிறை பார்க்காமல் நோன்பை முடிக்காதீர்கள் போன்ற கருத்தைத் தரும் பல ஹதீஸ்களாகும். இந்த ஹதீஸ்களை […]
ஏகத்துவம் ஏட்டின் ஏளன நிலை அபூ அப்தில்லாஹ் ஏகத்துவம் ஆகஸ்ட் 2009 இதழ் பக்கம் 39-ல் “மார்க்கம் மாறாத” என்ற கட்டுரையையும், பக்கம் 53-ல் “பிறை ஒரு விளக்கம்” என்ற அறிவிப்பையும் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் அவர்களது இரட்டை வேட போக்கைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே இதழ் பக்கம் 55-ல் “ஜாக்கின் இரட்டை வேடம்” என ஜாக் பிரிவினரை நையாண்டி செய்திருப்பதை விட நையாண்டிக்கு ஆளாகி நிற்கிறார்கள் இவர்கள்.
நாள் : 22,23 ஷஃபான் 1432 (23,24 ஜூலை 2011) சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை (இன்ஷா அல்லாஹ்) இடம் : J.K. மஹால், துறை மங்களம், பெரம்பலூர்
அபூ ஃபத்திமா 15.06.2011 (14.7.1432) புதன்கிழமை இரவு முழுச் சந்திர கிரகணம் ஏற்படும் என்பதை பல வருடங்களுக்கு முன்னரே கணக்கிட்டு அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்ட சந்திர நாள் காட்டியிலும் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்டபடி 15.6.2011 இரவு கணக்கிட்டபடி முழுச் சந்திர கிரகணம் இடம் பெற்றதை உலகின் பல பகுதியினர், குறிப்பாகத் தமிழ் நாட்டில் தங்கள் கண்களால் கண்டு உறுதிப்படுத்தினர். அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.
Y.முஹம்மது ஹனிஃபா, திருச்சி நபியே! பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “”அவை மனிதர்களுக்கு, காலங்களையும் ஹஜ்ஜையும் குறிப்பிடுபவை” என நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189) உலகெங்கும் 19.03.2011 அன்று மெகா பெளர்ணமி என்று பிரகடனம் செய்து அதை அங்கீகரித்துக் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கும்போது உலகின் எல்லா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த பெளர்ணமியால் ஏதாகிலும் மாற்றம் ஏற்படுகிறதா, பூமியின் சுழற்சியில் வானிலையில், கடலலையில், தட்பவெப்பத்தில் மற்றும் இது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது […]
2.10.2000 ஆவது வருடத்தில் ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து தற்போதைய TNTJ யினருடன் பிறை விவாதம் நடைபெற்றது. தத்தமது பகுதி பிறை என்ற கருத்தில் டி.என்.டி.ஜெ வினரும், சர்வதேச பிறை என்ற அடிப்படையில் ஜாக் ஏர்வாடி மர்கஸ் சார்பிலும் விவாதம் நடைபெற்றது.
விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதா? “உலமாக்களின் அலட்சியமும், முஸ்லிம்களின் அறியாமையும்” ஜாபர் சித்தீக், கம்பம்
இப்னு ஹத்தாது 08.08.2010 ஞாயிறன்று சென்னை ஜாக் தலைமையகத்தில் “பிறைக் குழப்பமும் இஸ்லாமியத் தீர்வும்’ என்ற அறிவிப்போடு பலர் பேசினர். காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவர்கள் என்ன பேசுகிறார்கள்? அதில் ஏற்கத்தக்க ஆதாரங்களைத் தருகிறார்களா? அதை ஏற்போமே என்று 39:18 இறைக்கட்டளைக்கு அடிபணிந்து அங்கேயே இருந்து அவர்கள் உரைகளை கவனமாகக் கேட்டோம். பிறையைக் கண்ணால் கண்டிப்பாகப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு உருப்படியான ஒரேயொரு ஆதாரத்தையும் அவர்களில் யாருமே தரவில்லை. மாறாக […]
நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் பகலில் நோன்பு நோற்பது கடமையாகவும், இரவில் நின்று வணங்குவது ஏற்றம் தரும் செயலாகவும் இருக்கிறது. நன்மைதரும் செயல்கள் என்றால் நிச்சயமாக அச்செயல்கள் அல் அஹ்ஜாப் 33:21, 36 இரு இறைவாக்குகளில் குறிப்பிட்டிருப்பது போல் கண்டிப்பாக அவை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களால் நடை முறைப்படுத்திக் காட்டித் தந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும்.
இறை மறையின் குறையற்ற பிறை![PDF]
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மிகவும் முக்கியமான ரமழானுடைய மாத மாகிய லைலத்துல் கத்துருடைய மாதம் மிக, மிக அருகில் வந்துவிட்டது. போன வருடம் இரண்டு நாட்கள் விடுபட்டது போல் இவ்வருடமும் ஆகிவிடக் கூடாது.ரமழான் வருவது கியாமத் நாளைப் போல் இரகசியமாக இல்லை. வேறு தேதிகளை கணிப்பது போல் ரமழானின் முதல் தேதியை முன் கூட்டியே சரியாக கணிக்க முடியும். அதற்காகத்தான் அல்லாஹு தாலா சூரியனையும், சந்திரனையும் நமக்காக வசப்படுத்தி தந்துள்ளான். நமது உலக காரியங்கள் எல்லாம் சந்திரனின் தேதிப்படி […]
விமர்சனம் : நீங்கள் நவம்பர் 2009 பக்கம் 15-ல் இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத் தொழுகையை உலகில் அனைவரும் தொழுவார்களா? என 03.06.09 உணர்வு இதழ் பக்கம் 13-ல் வினாத் தொடுத்துள்ளது பற்றிய விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் போது,
நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்! அபூ அப்தில்லாஹ் முன்னாள் பிறை கணிப்பு கலைஞரின் சில கேள்விகளுக்குரிய பதில்கள்! தாருல்ஹுதா நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் உமர் ஷரீஃப் பிறை கணிப்பு கலைஞர்களிடம் சில கேள்விகள் என்று 4 பக்க பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் பிரசுரத்தில் மலிந்து காணப்படும் அறியாமை யை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: 2009 ஆகஸ்ட் இதழ் பக்கம் 2 மற்றும் 23-ல் ரமழான் 21.8.09 முதல் ஆரம்பமாகிறது என்று தவறான தகவல்களை தந்துள்ளீர்கள். சௌதி உட்பட உலகம் முழு வதும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 22.8.09 முதல் ஆரம்பமாகியுள்ளது. நீங்கள் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். உலகம் முழுவதும் யாரும் கணிக்காததை நீங்கள் மட்டும் எந்த கணினியின் மூலம் துல்லியமாக கணித்தீர்கள். விரிவான விளக்கம் தரவும். அபூ நதீர். நாகர்கோவில்.