இப்னு ஹத்தாது இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து […]
1986 ஆகஸ்ட்
அபூ சுமையா, நாகை. கண்களிரண்டும் மூடிக் கொள்கின்றன – மீண்டும் திறவா வண்ணம். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”. சகப்பு மாற்றுகிறார்களோ என்னவோ அதற்குள் கசாப்புக் கடைக்கு ஆள் போகும். மளிகைக் கடைக்கு வேறொரு ஆள் பறக்கும். பண்டாரியைத் தேடிக்கொண்டு வரச் சொல்லிப் பல குரல் எழும்பும். வழியின்றி வேதனைகளை அனுபவித்து ஓய்ந்து போனவனை மண் மூடிக் கொண்ட பின், கூடி அமர்ந்து உண்டிட!.. என்ன கேவலம்! சாப்பிட வேண்டியதுதான். ஆண்டான்டு அழுதாலும் மாண்டவன் மீள […]
புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்., அல் – அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம். மனிதர்களுள் நன்மையை ஏவும் ஒரு குழு இருப்பதைப் போல், நன்மைகளைத் தடுத்து, தீமைகளை நன்மைகளைப்போல் உருவகப்படுத்தி மக்கள் சமுதாயத்தைப் படுகுழியில் வீழ்ச்சியுறச் செய்வதில் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டே உள்ளது. அதுதான் “சுயநலக் கும்பல்”! எங்கே தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி, உண்மைகளை மறைத்து, பொய்களை இட்டுக்கட்டி – சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் குளிர்காய்ந்து, தங்களின் வளமான வாழ்வைத் […]