நபிவழியில் நம் தொழுகை தொடர் : 43 அபூஅப்தீர் ரஹ்மான் “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) சென்ற இதழில் ‘ஸஃப்புக்குப் பின்னால் தனித்துத் தொழுபவரின் தொழுகைக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஸஃப்பில் இடமில்லாத போது, ஸஃப்பில் உள்ள ஒருவரை பின்னால் இழுத்து தம்மோடு வைத்துக் கொண்டு தொழ வேண்டும் என்ற வகையில் வந்துள்ள அறிவிப்புகளின் நிலை* எனும் தலைப்பின் தொடர்: ஸஃப்புக்கள் நிறைவான […]
1990 ஜூலை-ஆகஸ்ட்
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர்:18 அல்லாஹ்வும், அவனது தூதரும் போதுமே! A. முஹம்மது அலி பகுதி:4. நேர்வழி எதுவோ அதுவே நபிவழி; அதுவே நம்வழி. 1. (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழியேயாகும். (3:73) 2. மனிதர்களே! இது வேதமாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். இது மிக்க பாக்கியம் வாய்ந்ததாகும். ஆகவே இதனைப் பின்பற்றுங்கள்; இன்னும் அவனை அஞ்சி (பாவத்தை விட்டு விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள். (6:155) 3. எவர் எனது நேர்வழியை பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் […]
ஹதீஸ் பெட்டகம் தொடர்: 5 A. முஹம்மது அலி. சப்தமிட்டு “ஆமின்” சொல்லுங்கள் : அல்லாஹுவின் ஆணைகள்: (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் எதை விட்டு உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன். (59:7) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. எனவே, அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு […]
உண்மை முஸ்லிம்களாவது எப்போது? முஹிப்புல் இஸ்லாம் இறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே! நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா? உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது. (ஒன்றுமில்லை என்று சொல்ல வெட்கமா?) உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே செல்கிறது. ஏன்? ஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து […]
தஜ்ஜாலியத் பணி செய்வது யார்? அல்முகைதீன், பொட்டல் புதூர். இப்னு குலாம், பரங்கிப் பேட்டை “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். (மேலும்) அல்லாஹ்வுக்கும் (அவனுடைய இறுதி) தூதருக்கும் வழிபடங்கள்!” (3:31,32) “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன் அந்த இரண்டையும் நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள்! ஒன்று அல்குர்ஆன், இரண்டு என் வழிமுறை(மட்டும்). (அனஸ்(ரழி), முஅத்தா) அளப்பெரும் அருளாளன் எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) தன் […]
உணர்வதை ஏற்று நடப்போமா? M. நிஃமத்துல்லாஹ், B.A.,(CS) ஜித்தா அறிந்தப் பின் பயன் முழுமையடைந்து என்பது அதனை நம்வாழ்வில் ஏற்று நடப்பதில் தான் உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை. நம்மால் முடிந்த வரை அனைத்து காரியங்களிலும் அதன்படி நடக்க முழு முயற்சி செய்ய வேண்டும். இதையே இறைவன் திருமறையில் கீழ்க்கண்டவாறு எடுத்து இயம்புகின்றான். எவர்கள் விசுவாசம் கொண்டு (தங்களால் இயன்ற வரையில்) நற்காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களில் ஒருவரையும், அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் […]
நமது நிருபர் பாலதிய்யா தரும் நாட்டு நடப்பு திருச்சியில் சென்ற ஈதுல் அழ்ஹா(தியாகப்) பெருநாள் தொழுகை இரயில்வே ஜங்ஷன் அருகில் சரியாக காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ ஆர்வமுள்ள எல்லா முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் அங்கு கூடினர். அதில் இயக்கப் பெயரில் உழைப்பவர்களும், இயக்கப் பெயர்களை மறுப்பவர்களும் அடங்குவர். குர்ஆன், ஹதீஸ்களின்படி பத்திரிக்கை நடத்துபவரும், குர்ஆன் ஹதீஸை மக்களுக்கு போதிப்பதையே தனது தொழிலாகக் கொண்டவருமான, மப்ஊத் என்ற அத்தொழிலுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் […]
தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பது இஸ்லாமியக் கடமையல்லவா? தொடர்:2 Er.H. அப்துஸ்ஸமது, B.Sc.,M.Sc.,(Eng), சென்னை அபூஸயீதில் குத்ரீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்: உங்களில் யாரேனும் ஒரு முறையற்ற செயலைக் கண்டால் தன் கைகளால் அதை தடை செய்ய வேண்டும். அது முடியாவிட்டால் வாயால் கூறி சீர்த்திருத்தவேண்டும்; இவ்விரண்டும் முடியாவிட்டால், இதய பூர்வமாக அத்தீமையை வெறுக்க வேண்டும். கடைசி(யில் கூறிய)முறை ஈமானின் மிகவும் தாழ்ந்த நிலையாகும். இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், நபி(ஸல்) இவ்வாறுக் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: […]
ஐயமும், தெளிவும் ஐயம் : சிலர் ‘ஜனாஸா’ தொழுகையின் போது தமது செருப்பு முதலிய காலணிகளைக் கழற்றி விட்டும் மற்றும் சிலர் தமது காலணிகளைக் கழற்றி விட்டு அதன் மீது நின்று கொண்டும் தொழுகிறார்களே! இவ்வாறு தான் தொழ வேண்டுமா? – முஹம்மது யூனுஸ், சேலம் தெளிவு : ஒரு முறை நான் அனஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தமது காலணி-செருப்புகளுடன் தொழுதுள்ளார்களா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். (அபூ மஸ்லமா ஸயீது பின் யஜீத்(ரழி), புகாரீ) […]
முல்லாக்களின் கிஸ்ஸா : மீண்டும் புரசை மவ்லவி நிஜாமுத்தீனின் கப்ஸாக்கள் அபூஹாமிது – சென்னை (பல தடவைகள் நாம் புரசை மவ்லவி K.A.நிஜாமுத்தீனின் கூற்றுக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விமர்சித்திருக் கிறொம். இதுவரை மெளனம் சாதித்த மேற்படி மவ்லவியை. சென்ற இதழில் நாம் வெளியிட்ட ‘இமாம்களை அவமதிப்பதும். மக்களைக் குழப்புவதும் யார்?” என்ற ஆக்கம் தட்டி எழுப்பியுள்ளது. அந்நஜாத், மீது என்ன அவதூறு கூறினாலும், பொதுமக்களை படிக்க வேண்டாம் என்று வேண்டினாலும் நிஜாமுத்தீன் அந்நஜாத்தை படித்து வருகிறார் […]
புரசை மவ்லவி இவற்றையும் மறுப்பாரா? ஹம்துல்லாஹ் ஜமாலி வாசக நேயர்களே! ஜூன் இதழில் சென்னை தோழர் அபூஹாமிது எழுதி வெளிவந்த முல்லாக்களின் கிஸ்ஸாவில் “இமாம்களை அவமதிப்பதும், மக்களைக் குழப்புவதும் யார்?” என்ற ஆக்கத்தை படித்திருப்பீர்கள். அதில் புரசை மவ்லவியின் கப்ஸாக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விமர்சித்திருந்தோம். இவ்விதழில் புரசை மவ்லவி அக்கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்தும், விமர்சித்தும் எழுதியிருந்த கடிதத்தைக் கண்டீர்கள் (பக்கங்கள் 62 முதல் 66). இக்கடிதத்தில் தான் அவ்விதம் கூறவில்லை என ஓரிடத்தில் கூறுகிறார். அதே […]
ஆதாரப்பூர்வமான சரித்திர ஏடுகளிலிருந்து….. “AMAMA’ சுன்னத் வல்-ஜமாஅத் என தங்களை அழைத்துக் கொள்ளும் பிரிவார் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றியே ஆகவேண்டும். அவர்களே உண்மை முஸ்லிம்கள். இதனைப் பின்பற்றாதவர்கள் உண்மை முஸ்லிம்களல்லர் எனக் கூறி வருகின்றனர். நான்கு மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவது தான் குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றியதாக – பற்றிப் பிடித்ததாக – ஆகுமென நம்பிச் செயல்பட்டு வருபவன் நான் என புரசை மவ்லவி நிஜாமுத்தீன் போன்றோரும், அவரது முல்லா சகாக்களும் கூறி வருகின்றனர். இவர்களது […]
ஆஷூரா தினத்தைப் பற்றிய கதையளப்புகள்! ஹாபிஸ் மிஸ்பாஹி முஹர்ரம் எனபதற்கு “புனித மிக்கது” என்பது பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கிறது. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமழானுக்குப் பின் நோன்புகளில் மிக்க விசேஷமான நோன்பு ஷஹ்ருல்லாஹ்-அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்லான தொழுகைக்குப் பின் மிக்க விசேஷமான தொழுகை இரவுத் தொழுகையாகும். (முஸ்லிம்) அபூ கதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆஷூரா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பானது, அல்லாஹ் […]
ஹதீஸ்களில் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும் – அபூரஜீன் தொடர்: 3. 25. “எனது தோழர்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போன்றோரேயாவர். அவர்களில் எவருடைய சொல்லை நீங்கள் ஏற்று நடப்பினும் நேர்வழியடைந்து விடுவீர். இவ்வறிவிப்பை இப்னு உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக “நாஃபிஉ’வின் வாயிலாக இப்னு அப்தில் பர்ரு” பதிவு செய்துள்ளார்கள். மேலும் இதைப் பதிவு செய்த அவர்களே “நாஃபிஉ”விடமிருந்து இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் நம்பகமற்றவர் என்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். “நாஃபிஉ”விடமிருந்து இதைத் தாம் கேட்டதாகக் கூறும் “ஹம்ஸா” என்பவர் […]