விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : என் அகவை 70. என் பள்ளிப் பருவத்திலிருந்தே பல இஸ்லாமியத் தோழர்களுடன் ஆத்மார்த்தமாகப் பழகி இருக்கிறேன். அரசுப் பணியிலிருந்த காலத்திலும், பணியின் நிமித்தம் நெல்லை பேட்டை தொடங்கி சென்னை இராயப்பேட்டை (அமீர் மகால்) வரை எனக்குத் தோழர்கள் இருந்தனர், இருக்கின்றனர். மனித நேயத்திற்கும் மத நல்லிணக்கத்துக்கும் அந்த இஸ்லாமிய நண்பர்கள் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றனர். அவர்களுடன் நான் மசூதித் தொழுகைக்குச் சென்றுள்ளேன். என் இஸ்லாமியத் தோழர்கள் பலர் எங்களுடன் ஆலயங்களுக்கு வந்து […]
2010 ஜூலை
உண்மையான ஷரீஅத் சட்டம் அல்குர்ஆனே! இதனை பின்பற்றியே தீர்ப்பு வழங்க வேண்டும்! மண்டபம் M. அப்துல் காதர் அகில உலக மக்களுக்கும் ஒரே இறைவனான வல்ல இறைவன் மனிதனை படைத்து தூய வாழ்க்கைநெறி வாழ்வதற்கு அருள் மறையாம் அல்குர்ஆனையும் அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களையும் இவ்வுலகிற்குத் தந்தான். மனித வர்க்கம் நல்வழியில் வாழ்ந்திட இரண்டைப் பின்பற்றுங்கள், வழி தவற மாட்டீர்கள் என்ற உயர்வான கொள்கையினை முன்னிறுத்தி இஸ்லாமிய மார்க்கம் உலக மெங்கும் சுடர்விட்டு பிரகாசிக்கிறது. […]
S. ஹலரத் அலீ, ஜித்தா. ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் இட்ட அழகிய பெயர் “முஸ்லிம்கள்’. இந்த முஸ்லிம்களின் கூட்டமைப்பிற்கு நபி(ஸல்) அவர்கள் வைத்த பெயர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’. இதனை தவிர்த்து வேறு எந்தப் பிரிவுப் பெயர்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் அங்கீகரிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள்-இவர்களுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டு கால கட்டத்தில் கூட இஸ்லாத்தின் பெயரால் தனி ஜமாஅத் எவரும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று தவ்ஹீது பேசும் […]
இஸ்லாமிய ஒற்றுமையியல் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்புல் இஸ்லாம்
உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஜனநாயக ஆட்சி முறை என்றால் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி ஆட்சி நடத்துவதாகும். மக்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்களாகவும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர்களாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இல்லை என்றால் தங்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இழக்க முன் வருவார்களா?