ஐயம் : நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று மிஸ்ரில் உள்ளதாகக் குறிப்பிட்டு, அதனது ஜெராக்ஸ் காப்பி ஒரு நூலில் காணப்பட்டது. இது உண்மையான செய்திதானா? A. ஜலாலுத்தீன், துபை.
2011 ஆகஸ்ட்
A. கமால் உசேன் காலங்காலமாக திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. விருந்துகள் பரி மாறப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் திருமணச் சடங்கு முறைகள் விருந்து முறைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன. தமிழகத்திலேயே பல ஊர்களில் வெவ்வேறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் தவ்ஹீது முழக்கங்களினால், இஸ்லாமிய நபிவழித் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இன்னும் அனாச்சாரச் சீரழிவுகளில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம்களையும் கண்டு கொண்டு தான் இருக்க வேண்டிய நிலை.
குர்ஆன் ஹதீஸில் அதாவது மார்க்கத்தில் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்க அந்நஜாத் எப்போது பார்த்தாலும் இடைத்தரகர்கள் என்றும் புரோகிதர்கள் என்றும், மதகுருமார்கள் என்றும், பூசாரிகள் என்றும் மவ்லவிகளையும், ஆலிம்களையும், மார்க்க அறிஞர்களையும் இழித்துப் பழித்து விமர்சிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.