M.சையித் முபாரக், நாகை. சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் பல வரம்புமீறல்கள் நடைபெற்று வருகின்றன. அதில் பாங்குக்குமுன் திக்ர், ஸலவாத்து கூறுதல்; ஜமாஅத் தொழுகைக்குப் பின் கூட்டு துஆ செய்தல்; வாரம் ஒருநாள் இஷா தொழுகைக்குப் பின் கூட்டு திக்ர் எனும் பெயரில் சப்தமிட்டு திக்ர் செய்தல், பல பெரியார்கள் பெயரில் மெளலிது ஓதுதல் போன்றவற்றை நாம் முன்னரே அறிவோம். (பார்க்க: 7 : 55,205)
2012 ஏப்ரல்
நாத்தீக பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு…. நோபல் பரிசு-2011-பிரபஞ்ச விரிவு ஓர் ஆய்வு அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை-உறுதிப்படுத்தும் ஆய்வின் முடிவுகள்: ஜாஃபர் சித்தீக், கம்பம் நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியல், இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான 5 துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு 1969ஆம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டுத் தேசிய வங்கியால் ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.
படைப்பின ஒருமைப்பாடே இஸ்லாத்தின் இலட்சியம் இஸ்லாம் கண்ட படைப்பின ஒருமைப்பாடு மானுட ஒருமைப்பாட்டை உள்ளடக்கியதே! முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடு: உம்(மா)த்: சமுதாயம் ஒருமை; உமமுன்: சமுதாயங்கள் பன்மை. மனிதப் பார்வையில் மற்ற படைப்பினங்கள் அஃறிணையே! மனிதர்களுக்கு அஃறிணையாகத் தெரியும் மற்றப் படைப்புக்களை அல்லாஹ் உங்கள் போன்ற சமுதாயங்களே! (காண்க. அல்குர்ஆன்: 6:38) என்று உயர்திணையாக அல்லாஹ் உயர்த்திக் காட்டுவது ஏன்? மனிதர்கள் கூடுதல் கூர்மையுடன் ஆழ்ந்து சிந்தித்தல் அவசியம். சமுதாயமாய்த் திகழவேண்டிய மனிதர்களே, குறிப்பாய் முஸ்லிம்களே! […]
மு.கதிஜத்துல் சாரா M.Sc., கிழக்கு தாம்பரம் அல்லாஹ் கூறுகிறான் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான(நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒரு வருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர் கள் நஷ்டத்திலில்லை) அல்குர்ஆன். அத். 103