M.S.கமாலுத்தீன், பெங்களூர். ஓராண்டுக்குத் திட்டமிட வேண்டுமா? பயிர் செய்; பத்தாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மரங்களை நடு; நூறாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மனிதர்களை உருவாக்கு; – சீனப் பழமொழி.
2012 டிசம்பர்
உஸ்மான் இப்னு சல்மான் இவ்வுலகில் முஸ்லிமாக இருக்கின்ற நமக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று அல்லாஹ் கூறவில்லை. நமக்கென கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என ஐந்து கடமைகளை வகுத்துள்ளான்: கட்டுப்பாட்டுக்குள் வாழ வேண்டுமென்றுதான் அல்லாஹ் முன்னைய நெறிநூல்களையும், குர்ஆனையும் அனுப்பி அதைக் கற்றுத் தருவதற்கு நபிமார்களையும் அனுப்பி வைத்தான். ஆனால் ஷைத்தானுடைய சூழ்ச்சியால் ஏதாவது ஒரு விஷயத்தில் ஷைத்தானுடைய வலையில் முஸ்லிம்களும் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நபிமார்களின் வாரிசுகள் என்போர் பிறை விஷயத்தில் கவனம் செலுத்துவார்களா? [PDF]
M.T.M முஜீபுதீன், இலங்கை நவம்பர் 2012 தொடர்ச்சி … நூஹ்(அலை) அவர்களின் வரலாற்று உண்மைகளும், அக்காலத்தில் இடம் பெற்ற பிரளயம் சார்ந்த விபரங்கள் இந்து, யூத, கிறித்தவ வேதத் தொகுப்புகளில் கூட்டல், குறைவுகளுடன் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் அவ்வேதத் தொகுப்புகள் களங்கப்பட்டுக் காணப்படுவதாகும். முஸ்லிம்கள் முன்னைய நெறிநூல்களை விசுவாசித்தாலும் பின் அவை மனிதக் கரம் பட்டு மாசடைந்துள்ளதால் அவற்றை ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை. அல்குர்ஆன் அருளப்பட்ட பின் முன்னைய நெறிநூல்கள் அல்லாஹ்வினால் இரத்துச் செய்யப்பட்டுவிட்டன. ஆகவே உண்மை வரலாறுகளையும், […]
அபூ அப்தில்லாஹ் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக, அமைப்புகளாக, இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் […]