ஐயம் : குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் இருக்கும் போதே உடல்நிலை குறைவினால் அல்லது இயலாமையினால் தயம்மும் செய்யலாமா? அந்நஜாத் வாசகி. தெளிவு: குளிப்பு கடமையான நிலையில் உடல் நலக்குறைவு அல்லது இயலாமை போன்ற காரணங்களினால், மண் கொண்டு தயமம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்ஆனில் 4:43, 5:6 வசனங்களில் தயமம் பற்றி விவரித்து உள்ளான். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது, நீங்கள் கூறுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள். அன்றியும், […]
2018 ஜூன்
புளியங்குடி அபூ கனிபா இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் (பிறை மறைக்கப்பட்டால்) ஷஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப்படுத்துங்கள்.” என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். (1909) இந்த ஹதீஃதின் அடிப்படையில் இந்த முஸ்லிம் சமுதாயம் பிறை பார்க்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏன்? நபி(ஸல்) அவர்கள் பிறையை பார்ப்பது சம்பந்தமாக சில கட்டளைகள் இடுகி றார்கள். அதன் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே […]
அப்துர் ரஹ்மான், திருச்சி இன்று முஸ்லிம் சகோதரர்களிடையே விபச்சாரம் பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதை விட கொடிய குற்றமான புரோகிதம் குற்றமாகவே பார்க்கப் படுவது இல்லை. காரணம் குர்ஆனை சுயமாக படித்து புரிந்து கொள்ள முயலாமல் மவ்லவிகள் பயான்கள் மூலம் குர்ஆனை விளங்கி கொள்ள முயல்வது தான். மவ்லவிகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான உண்மைகளை கூற மாட்டார்கள். காரணம் மக்கள் சொத்துக்களை தவறாக உண்பது தான், இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “நிச்சயமாக மதகுருமார்களிலும், துறவிகளிலும் […]
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 5 அபூ அப்தில்லாஹ் முல்லாக்களின் வாதம் : மார்க்க விஷயத்தில் அரபி மொழி கற்று அதில் தேர்வு பெற்ற பண்டிதர்களுக்கு யூகித்தறிந்து இலக்கண இலக்கியத்தில் யூகம் செய்து ஒன்றை சொல்ல அனுமதி இல்லை என்ற நமது கருத்தை மெளலவிகள் மறுக்கிறார்கள். குர்ஆனின் 4:83 வசனத்தில், தகுதி பெற்றவர்கள் மார்க்கக் காரியங்களில் யூகித்தறிந்து சொல்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கி றதே! என்று அந்த வசனத்தில் வரும் “இஸ்தின்பாத்” என்ற ஒரு […]
இப்னு ஸதக்கத்துல்லாஹ் (முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் (வந்து விடுவார்கள்) என்று நீங்கள் நினைக்கிறீரகளா? (அதுதான் இல்லை) இவர்களில் ஒரு சாரார். அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக்கூடியவர்கள். 2:75 மற்றொரு சாரார், எழுதப் படிக்கத் (தெரிந்த மற்றும்) தெரியாதவர்கள் ஆவர். அவர்களுக்கு நெறிநூலைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான். மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். 2:78 அபூ […]
மர்யம்பீ, குண்டூர், 1. அல்குர்ஆன் யாருக்கு நேர்வழி என்று அல்லாஹ் கூறுகிறான்? பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டி என அல்லாஹ் கூறுகிறான். (2:2) 2. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர் எந்த நிலையில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (2:154) 3. வறட்டு கவுரவம் கொண்டவர்களைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்? வறட்டு வாதம் பாவத்தின் பக்கம் தள்ளிவிடுகின்றது. அதனால் அவனுக்கு நரகமே. (2:206) 4. இமாம்களும் தமது உளறல்களும் […]
முஹம்மது சலீம், ஈரோடு மனிதர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நன்மை மற்றும் தீமைகளை தெளிவாக எடுத்துக் கூறி அதன் மூலம் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களிலி ருந்தே ஒருவரை அல்லாஹ் தன் தூதராக தேர்வு செய்து அவருக்கு இறை செய்திகளை வழங்கி மனித சமுதாயத்திற்கு பேருதவி புரிந்துள்ளான். இத்தகைய ஏராளமான இறைத்தூதர்களில் நபி(ஸல்) அவர்கள்தான் இறுதியானவர். நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு வேறு எந்த ஒரு இறைத்தூதரும் வருவதற்கு தேவையில்லாத அளவிற்கு பரிபூரணமான வாழ்க்கைத் திட்டத்தை அல்லாஹ் குர்ஆனின் மூலமாகவும், […]
அமல்களின் சிறப்புகள்… ஒரு திறனாய்வு!. தொடர் : 37 னி. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் தமிழாக்கவும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரை யிலிருந்து, 12 வ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே […]
அபூகனீபா, புளியங்குடி பொதுமக்களின் ஜகாத் நன்கொடை பணத்தில் 7 வருடம் உழைக்காமல் உண்டு, மார்க்கம் பயிலும் மதரஸா கல்வியை மத்ஹப்கல்வியை எனது இஸ்லாம் படிக்க சொல்லவில்லை. எங்கள் இறைத்தூதர் முகம்மது(ஸல்) அவர்களும் அப்படிப்பட்ட மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை இறைக்கல்வியை வைத்து எந்த இறைத் தூதரும் பிழைப்பு நடத்தவில்லை. அப்படி பிழைப்பு நடத்தும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்கவில்லை. இன்று மதரஸா என்ற பெயரிலே இஸ்லாம் காட்டித்தராத முறையில் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த கல்வி நிலையங்களில் […]
ஹலரத் அலி, திருச்சி-7. மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதீஃதின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும். பிறை பார்த்தலுக்கான ஹதீஃதை பார்ப்போம். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) புகாரி, 1900,1906, முஸ்லிம் 1958. இது […]
ரமழான்-ஷவ்வால்-1439 நீட் நுழைவுத் தேர்வு! இக்கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்துள்ள, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) குளறுபடிகள் நமக்கு கற்பித்துத் தந்த பாடம் என்ன? கல்வியை மத்திய ஆளுமையின் கீழ் கொண்டு வருவது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதே நாம் கற்றுக்கொண்ட பாடம். எப்போதுமே நடைபெற்றிராத குளறுபடிகள், மையங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகிறது. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் மையங்கள் ஒதுக்குவதில் ஏன் இந்த குளறுபடிகள்? தமிழகம் எங்கே? சிக்கிம் எங்கே? […]