தலையங்கம்! அழகிய முன்மாதிரி! அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… வல்லோனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ்வை வழிபட்டு, அவனது இறுதித் தூதருக்கு மட்டும் கட்டுப்பட்டு, அதாவது அல்லாஹ் இறக்கி அருள்புரிந்த நேர்வழி போதிக்கும் குர்ஆனையும், குர்ஆனுக்கிணங்க தூதர் போதித்த செய்திகளையும் (ஹதீத்கள்) பின்பற்றி, உலகளவில் முஸ்லிம்களின் ஒரே ஜமாஅத்தாக (ஜமாஅத்துல் முஸ்லிமீன்) ஒரே தலைமையின் (அமீரின்) கீழ் செயலாற்றுவதுதான் இஸ்லாம். ஆதாரமாக, அல்லாஹ்வின் சொல்லும் தூதரின் ஹதீதும் இதோ! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை […]
2021 டிசம்பர்
சிந்திப்பவர்களுக்காக! அப்தில்லாஹ் இப்னு அருணாச்சலம் அது சுருக்கமானது, விரிவானதும் அல்ல… நிரந்தரமானதும் அல்ல… ஆம்! நாம் வாழும் இந்த வாழ்க்கை… பூமி யின் மீது மனிதர்கள் நாம் வாழும் வாழ்க்கை நீர்க்குமிழி உருவாகி மறைவது போல மிகச் சுருங்கிய காலம் உடையது. ஆனால், நினைத்துப் பாருங்கள்… வானி லிருந்து இறைவன் மழையை இறக்குகிறான். நிலங்களின் மீது பச்சைப் போர்வை போல மரம், செடி, கொடிகள் என எல்லாமும் பரவச் செய்கிறான். மனிதனோ, தானே அந்த மழையை இறக்கி […]
வெற்றி யாருக்கு? அபூ அப்தில்லாஹ் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களால் நிறைவு செய்யப்பட்டு எவ்வித கலப்படமுமில்லாமல் நிலைநாட்டப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கம் குறுகிய காலத்திலேயே கலப்படத்திற்குள்ளாகியது. ஹிஜ்ரி 400 வாக்கில் தக்லீது (மத்ஹபுகள்) தஸவ்வுஃப் (தரீக்காக்கள்) போன்ற தவறான கொள்கைகளால் நிலை குலைந்தது. அவை மேலும் மேலும் முற்றி முஸ்லிம் சமுதாயத்தினர் வீழ்ச்சியில் அதலபாதாளத்தில் வீழ்ந்து புழு பூச்சிகள் போல் துடிக்கும் நிலைக்கு ஆளாயினர். இந்த நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் அதன் உன்னத நிலைக்கு தூக்கி […]
அழைப்புப் பணி! K.M.H. நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி (ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 1¼ லட்சம் நபிமார்கள், செய்து வந்த தூய பணியான, அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ் வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. சுமார் 1¼ லட்சம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள். “நம்பிக்கை கொண்டு, சாலிஹான அமல்கள் செய்து […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை! சரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். படைத்த ஏக இறைவன் பெயரால்…. சோதனையின்றி வாழ்க்கையா? சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளை பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் நிச்சயமாக உங்களை நாம் சோதிப்போம். (இறைநூல் 2:154) ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்… அமல்களின் சிறப்புகள்… ஒரு திறனாய்வு ! அப்துல் ஹமீத் தொடர் : 76 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. நவம்பர் மாத தொடர்ச்சி…. “யூதர்களின் கடின உள்ளத்திற்கு ஓர் உதாரணம்” இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக் காதவனாக இல்லை. (2:74) “புறம் பேசுவதை மனித […]
இதுதான் இயக்கவாதிகளின் ஏகத்துவம்,,,,, அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா? ஹலரத் அலி இன்றைய இயக்கத் தலைவர், ஏராள மான புதுப்புது மார்க்க விளக்கம் கொடுத்து சமுதாயத்தில் குழப்பம் உண்டாக்கி வரு வது அனைவரும் அறிந்ததே! உதாரணமாக, 3:7 வசனத்தில் முதஷாபிஹாத் வசனங் களை அல்லாஹ்வும் அறிவான், அறிஞனும் அறிவார்கள். 2:102 ஹாரூத் மாரூத் என்ற இருவரும் மலக்குகள் அல்ல, ஷைத்தான்களே! வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிருஸ்துவ பெண்களை மண முடிக்கக் கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் […]
முஸ்லிமை சந்திக்கும்போது…? – மர்ஹூம் ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் “முஸாபஹா’ செய்வதும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைக ளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், “முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது? என்பதை குர்ஆன், ஹதீஃத் ஆதார அடிப்படையில் விளங்குவோம். இரண்டு கைகளால் “முஸாபஹா’ செய்ய வேண்டும் என்போர் புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஃதை […]
“குர்ஆனே ஓர் அற்புதம்” சைய்யது நிஜாமுல்லாஹ், சேலம். புனித குர்ஆன் அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட மிகப் பெரும் பரிசாகும். எல்லா ஞானங்களும் யாரிடம் தோன்றி, யாரிடம் முடிவு அடைகின்றதோ அந்த அருளாளன் இடமிருந்து வந்ததால் அல்குர்ஆன் ஞானம் நிரம்பியுள்ளதாக இருக்கிறது. மனிதனுடைய பிரச் சனைகள் வாழ்க்கையின் எத்தகைய நிலையில் ஏற்படுவதாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கு அழகிய தீர்வுகளை குர் ஆன் அளிக்கிறது. மேலும் வாழ்வியல் சிக்கல்களை எதார்த்தமாக அணுகுவதோடு தலைசிறந்த தீர்வுகளை சத்திய கண்ணோட்டத்தில் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஜும்மா மற்றும் பெருநாள் தொழு கையில் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை அவசியமா? அப்துல் காதர். தெளிவு : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுதுள்ளனர். பள்ளிவாசலுக்கு ஜமாஅத்துடன் வந்து தொழ விரும்பும் பெண்களை எவரும் தடுக்க முடியாது. எனினும் வீடுகளில் தொழுவதே சிறப்பானது. “பெண்களை பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடு(களில் தொழுவது) தான் அவர்களுக்குச் சிறந்தது” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: புகாரி, […]