தலையங்கம்! மின்சார வாகனம் வருகிறது! நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்சினையால் நம் நாட்டின் தலைநகர் டெல்லி திணறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே டெல்லிதான் இப்பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புதிய புதிய வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசிய அல்லது அவசர சூழலில் மத்திய, மாநில அரசு கவனம் செலுத்தி வந்ததன் பயனாக, மின்சார வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாடு பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர […]
2021 மே
இதுதான் இஸ்லாம் காட்டும் கல்வி படைப்பினங்களை ஆராய்ந்து படைத்தவனை அறியும் கல்வி! S. ஹலரத் அலீ மறுபதிப்பு : சமீபத்தில், சவூதி நாளிதழ் “அரப் நியூஸ்’ (Arab News) படித்தபொழுது, ஒரு அமெரிக்கரின் கடிதம் கண்ணில் பட்டது. கோர்டன் ரீட் (Gordon Reade) என்பவர் எழுதுகிறார், “ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இருண்ட காலத்தில் இருந்தபொழுது, அரேபிய முஸ்லிம்கள் கல்வி, கலை, அறிவியல், கணிதம் மற்றும் இராணுவத் துறைகளில் உச்சநிலையில் இருந்ததாகவும், குறிப்பாக, இன்று எனது அமெரிக்கா […]
பெண்கள் காதுகளில் துளையிட அனுமதியுண்டா? அகமது இப்ராஹீம், புளியங்குடி பெண்கள் தங்களை தங்கம், வைரம், வெள்ளி போன்றவைகளை கொண்டு ஆபரணங்கள் செய்து தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் உலகம் முழுவதும் காலகாலமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. தங்கம், வெள்ளி என்றாலே அது பெண்களுக்கான ஆபரணங்கள் என்றே கருதப்பட்டு வருகிறது. இத்தகைய ஆபரணங்கள் அணிய காதுகளில் துளையிட்டுக் கொள்வது ஆதிகாலத்திலிருந்து வரும் நடைமுறையாகும். இஸ்லாமிய மார்க்கத்திலும் காது குத்தி, அதில் காது வளையங்கள், கம்மல் போன்ற ஆபரணங்கள் […]
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் -9 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு “ஜாஹிலிய்யா” என்ற மடமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த அன்றைய அரபு மக்களை அறிவின் உச்சிக்கே அழைத்துச் சென்றார்கள் இறைவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள். அதற்காக அவர்கள் கையாண்ட முறை, முன்னோர்களையும், முன்சென்ற அறிஞர்களையும் மூடத்தனமாக நம்பி அவர்களின் அடிச்சுவற்றில் நடைபோட்ட அந்த மக்களை அதிலிருந்து திசை திருப்பி இறைவனது இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதனது போதனைகள்படி நடைபோட வைத்ததேயாகும். […]
திருமண அவலங்கள்… (பகுதி-2) Y. முகமது ஹனீப், திருச்சி வரதட்சணை வியத்தில் சொல்ல வேண்டுமானால், அதைக் கண்டித்து பேசக் கூடியவர்கள் பேசிப்பேசியே வாய்கள் புளித்துப் போய் சலித்துப் போய்விட்டது என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு தெளிவாகவும், கடுமையாகவும் ரோஷம் வரும்படியும் பேசியும் நம் முஸ்லிம் சமூகத்துக்கு புத்தி வரவில்லை. நமது அரசியலமைப்பு சட்டத்திலும் வரதட்சணை கொடுமைகளுக்கான தண்டனை சட்டங்களையும் இயற்றிவிட்டார்கள். ஆனாலும் நம்மவர்கள் திருந்தவில்லை. பெண் பேசச் செல்லும்போதே நன்கு விசாரித்துக் கொண்டு நல்ல பசையுள்ள ஆட்கள் […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! M. அப்துல் ஹமீத் தொடர் : 69 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி […]
குர்ஆனின் நற்போதனைகள்… மனிதனின் மறுபக்கம்! Dr. A. முஹம்மது அலி, மறுபதிப்பு : 1. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:6) 2. மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 18:54) 3. நான் இறந்தால் மீண்டும் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா? எனக் கேட்கிறான். (அல்குர்ஆன் 19:66) 4. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நாம் நிச்சயமாக முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்கவேண்டாமா? (அல்குர்ஆன் 19:67) 5. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். […]
தொழுகையில் வரிசையின் ஒழுங்கு! K. ரஹிமுத்தீன், திருச்சி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் (தொழுகை) வரிசைகளை சீர்படுத்துங்கள். வரிசையின் ஒழுங்கு தொழுகையை முழுமைப்படுத்துவதில் உள்ளது. (புகாரி : 723, முஸ்லிம்:433) வரிசையில் சமமாக நில்லுங்கள் : வரிசையில் சமமாக நில்லுங்கள். தோள்பட்டை அருகே நிற்பவரின் தோள்பட்டையுடனும் உங்கள் பாதங்கள் அருகே நிற்பவரின் பாதத்துடனும் சேர்ந்து நில்லுங்கள் (இல்லையயனில்) உங்கள் முகத்தை அல்லாஹ் வேறுபடுத்திவிடுவான். (புகாரி:717-725, முஸ்லிம்:436) அல்லாஹ் பிற்படுத்தி விடுவான்: நீங்கள் (ஜமாஅத்திற்கு) முந்துங்கள். என்னை பின்பற்றுங்கள். […]
இயக்கம்! – கு. நிஜாமுதீன் மறு பதிப்பு : இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் உலகிலிருந்து ஒழித்துவிட பல வருடங்களுக்கு முன்பிருந்தே சர்வதேச அளவில் முயற்சிகள் அதிவேகமாக செய்யப்பட்டு வருவதை அறியாதவர்கள் இருக்க முடியாது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி போன்ற புரட்சிக்கு தலைமை தாங்கும் சாதனங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிர்த்திசையில் செயல்படுகின்றன. இம்முயற்சிகளை முறியடிக்க அவ்வப்போது பல இயக்கங்கள் உலக அளவில் தோன்றின. இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் இங்கு முஸ்லிம்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக ஆக்கப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களின் […]
நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்… எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை ஏப்ரல் மாத தொடர்ச்சி…. உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்க முடியாது: உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்கமுடியாது. (இது) உம்முடைய இறைவனால் தீர்மானிக்கப்பட்டு விட்ட உறுதியான முடிவாகும். (19:71) என்பதாக இறைவன் குறிப்பிடுகின்றான். இதில் நல்லோர் தீயோர் யாராக இருந்தாலும் நாளை மறுமையில் நரகத்தில் நுழைந்து அதைப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள் என்பது தெளிவு. (நபியே!) இவை உம்முடைய இறைவன் […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி மறைந்த திரை, இதயத்தில் உறை, காது செவிடு : நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் நாம் ஒரு திரையைப் போட்டு விடுகிறோம். எதையும் அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்கள் மீது உறை போட்டு விடுவோம். மேலும், அவர்கள் காதுகளை செவிடாக்கி விடுகிறோம். நீர் குர்ஆனில் உம் அதிபதியின் கட்டளைகளை எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்போடு முகத்தை திருப்பி சென்று விடுகின்றார்கள். (இறைநூல்: 17:45,46) […]
ஆட்சியை அளிப்பவன் அல்லாஹ்வே! இறைப்பிரியன் இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, யார் ஆட்சியை கைப்பற்றுவது என்று தெரிந்து விடும் இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்னதாகவே பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய ஊடக பேரங்கள் வாயிலாகவும், மத்திய அரசின் எடுபிடி யாக செயல்படும் தேர்தல் கமினின் இதுவரை நம் தமிழக அரசியல் சரித்திரத் தில் நடைபெறாத சில அதிரடி செயல் பாடுகளினாலும் ஆட்சிக்கு […]