தலையங்கம்! ஃபாஸிஸ்ட்களின் தந்திரம்! அல்லாஹ்வின் மார்க்கத்தை ஊதி அணைக்கும் முயற்சியில் இடைவிடாது இணைந்து உழைக்கும் பல்வேறு உலக மற்றும் அமைப்பு தலைவர்களும், இஸ்லாமியர் மீது மிகுந்த வெறுப்பு கொண்டு அவர்களை இழிவுபடுத்தி அழித்தொழிக்க நினைக்கும் அவர்களின் தொண்டர்களான கைக்கூலிகளும், மாதர்களுக்கான அநீதிக்கு எதிராகப் போராடும் பெண் விடுதலை கட்சி சமூக ஆர்வலர் சகோதரி சபரிமாலா அவர்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தெரிந்து அவர் மீது அவதூறு பரப்பி அவரை விமர்சனம் செய்வதை நாம் சமூக […]
2022 பிப்ரவரி
சாமியார்கள்! K.M.H. அபூ அப்தில்லாஹ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சாமியார்களைப் பற்றிய செய்திகள் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. துறவறத்தைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும் பெண்களையும், ஆசிரமங்களில், மடங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வசாதாரண நிகழ்ச்சியாக ஆகிவிட்டது. உலக அழிவுக்குச் சமீபத்தில் விபச்சாரம் பெருகும் என்று இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கு இந்தச் சாமி யார்களும் முன்னுதாரணங்களாகத் திகழ்கிறார்கள். சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி, பகல் வேஷமாகி வருகிறது. அறிவில் குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் […]
இறை நம்பிக்கையாளர்களே… இஸ்லாத்திற்கு வாருங்கள்! அப்தில்லாஹ் இப்னு அருணாசலம் அட என்னப்பா நீ, வணங்கத் தகுதியான ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்கக் கூடிய முஸ்லிம்களாகிய இறை நம்பிக்கையாளர்களையா இஸ்லாத்திற்கு அழைக்கிறாய், இஸ்லாம் என்றால் என்னவென்றே அறியாத மக்களை நோக்கி அழைத்தாலும் சரி எனலாம், முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்தே… என் சகோதர சகோதரிகளே! உங்கள் எண்ண ஓட்டத்தை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு, ஏக இறைவனான அல்லாஹ் தன் இறை வேதமாக, மனிதகுல வழிகாட்டியாக, இறுதிநாள் வரை எந்த […]
இணை வைக்கும் முஸ்லிம்கள்! (தொடர் – 2) அபூ ஹனிபா, புளியங்குடி கடந்த பதிவில் இணை வைப்பு என்றால் என்ன? இணை வைத்தால் என்ன நடக்கும்? என்பதை பார்த்தோம். இன்றைய பதிவில் இணை வைத்த முதல் முஸ்லிம் யார்? என்பதை பார்ப்போம். “இணை வைத்த முதல் முஸ்லிம்” : ஆதம் நபியை படைப்பதற்கு முன்னால் அல்லாஹ் வானவர்களை படைத்திருந்தான். வானவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாகவே இருந்தார்கள். (அல்குர்ஆன் 7:34) ஆதம் நபியின் மூலம் அல்லாஹ் வானவர்களை சோதிக்க […]
புரியாத புதிரா குர்ஆன்? அலி, கல்லிடைக்குறிச்சி சூப்பர் முஸ்லிம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் முஸ்தபா என்பவர் மிக சமீபத்தில் (நவம்பர் 20ம் தேதிக்குப்பின்) வெளியிட்ட தப்ஸீர் இல்லாமல் குர்ஆன் புரியாதா? என்ற வீடியோவில் ததப்புருல் குர்ஆன் என்ற தப்ஸீதை அறிமுகம் செய்துவிட்டு குர்ஆனை புரிந்து கொள்வதற்கு Arabic Basic அவசியம். அரபி மொழி இலக்கண அறிவு அவசியம். அதே போன்று ததப்புருல் குர்ஆன் தப்ஸீரும் அவசியம் என்கிறார் இது இல்லாமல் அவரவர் தாய் மொழியிலுள்ள […]
நான் அவரை விட மேலானவன் என்ற பெருமை! S.H. அதுர்ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்”. “(படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள் புரியட்டும்”. சொர்க்கத்தில் சிறந்த அறிவாளியாக கருதப்பட்டு வந்த இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு செவி சாய்க்காத காரணத் தால் அவன் மூலம் வெளிப்பட்டது தான் பெருமை என்ற பண்பு. அதை குர்ஆன் விவரிக்கும்போது; “நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜனவரி 2022 தொடர்ச்சி… “அல்லாஹ்தான் அனைத்துப் பொருட் களையும் படைத்தவன் (அவற்றுக்குப் பெயரிட்டவன்) ஆவான்” அல்லாஹ்(தான்) அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் (அவற்றுக்குப் பெயரிட்டவன்) ஆவான். அவனே அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளனும் ஆவான். (39:62) என்று சொல்லி விட்டு, வானங்கள் மற்றும் பூமியின் (அனைத்துக் கருவூலங்களின்) திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. (39:63) என்று சொல்கின்றான். மேலும் (அவற்றின்) அனைத்துப் பெயர்களையும் (இறைவன் மனிதர்களின் மூல பிதாவான) ஆதமுக்குக் கற்றுக்கொடுத்தான் (2:102) என்று […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்! (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… பொறுமை இறையச்சம் நன்னடத்தை இவற்றை கடைபிடித்தலே நன்மையை தேடி தரும் செயல்கள். (முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும், உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் இறைநூல் அருளப் பட்டவர்களிடம் இருந்தும், இணை வைப்போரிடம் இருந்தும் அதிகமான வேதனை தரும் பல […]
இறைவனிடம் மீளுவோம்! இப்னு சித்தீக், கடையநல்லூர். இயற்கைச் சீற்றங்களான புயல், சூறா வளி, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்றவற்றின் உருவாக்கத்தை மனிதர்களாகிய நாம் முன்கூட்டியே உணர முடிந்தாலும், அதனைத் தடுப்பதற்கு சக்தியற்றவர்களாக நாமும் இன்றைய வளர்ச்சியடைந்த தொழில் நுட்பங்களும் இருந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சோதனைகளும், வேதனையான நிகழ்வுகளும் ஏன் பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கிறது? இது ஏன் நல்லோரையும், பாமரரையும், அப்பாவிகளையும் விதிவிலக்காய் விடுவதில்லை என்பதைப் பற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள். “நீங்கள் வேதனைக்குப் பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் இப்றாஹிம்(அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை என்ன செய்வதாக கனவு கண்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? அறுத்து பலியிடுவதாக. அல்குர்ஆன் 37:102 மார்க்கத்தில் இல்லாத புதிய வியங்களை உருவாக்கியவனை அல்லாஹ் என்ன செய் வதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? சபிப்பதாக. முஸ்லிம் 4002 யூனுஸ் நபி அவர்கள் மீது நிழல் தர எந்த கொடியை முளைக்கச் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்? சுரைக்கொடி. அல்குர்ஆன் 37:146 சுலைமான் நபி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட […]
உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! (ஸலாம்) உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86) மாற்று மதத்தார்கள் நமக்கு ஸலாம் சொல்லும்போது அதற்குப் பதிலாக இந்த வசனத்தின் பிரகாரம் வ அலைக்கு முஸ்ஸலாம் என்றோ அல்லது வரஹ்மத்துல் லாஹி வ பரக்கத்துஹு என்று கூடுதலாகவோ கூறலாம், அல்லது அப்படியே அதைத் […]
ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்!! முஹம்மத் ரஃபி நாம் பாலர் பாட இஸ்லாமிய கல்வியில் ஈமான் என்றால் என்ன? என்ற வினா தொடுத்து சொல்லித்தரப்பட்ட “ஈமான்’ பற்றிய பாடத்தில் அதற்கு விடையாக, அல்லாஹ்வை நம்புவது, 2. அவனது மலக்குமார்களை நம்புவது, 3. அவனது இறைநெறி நூல்களை நம்புவது, 4. அவனது தூதர்களை நம்புவது, 5. இறுதி நாளை நம்புவது, 6. விதியை நன்மை, தீமை பற்றி நம்புவது என்ற ஆறு அம்சங்களையும் படித்து பசுமரத்து ஆணி போல் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : நாமெல்லாம் ஐந்து வேளை தொழுகிறோம் சரிதான். ஆனால் எங்கள் ஊரில் சிலர் ஐந்து வேளை தொழுங்கள் என்று குர்ஆனில் சொல்லப்படவில்லையே! ஏன்? என்று கேட்கிறார்கள். நானும் குர்ஆனில் விளக்கங்களை எல்லாம் தேடிப் பார்த்தும் கூட ஐந்து வேளை தொழுகுங்கள் என்று சொல்லக் கூடிய சொல் இல்லை. விளக்கம் தாருங்கள்! A.K.M.B. செங்கை. தெளிவு : ஜகாத் 2டி சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. தினசரி ஐவேளை தொழவேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. ஏன்? […]