அரசுவேலைகளைஇழக்கும்முஸ்லிம்இளைஞர்கள்! அதற்குகாரணமானமுஸ்லிம்இயக்கதலைவர்கள்… கல்வியில் இலக்கு நிர்ணயித்து படித்தால் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியும். அப்படி படித்து முன்னேறி வரும் இன்றைய முஸ்லிம் தலைமுறைக்கு பல வகைகளிலும் தடைகள் போட்டு முஸ்லிம்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அதில் ஒன்று தான் ஹிஜாப் விவகாரம். நமது கல்வியறிவை கொண்டு இந்த தடைகளை உடைத்து முன்னேறுவதில் முஸ்லிம் சமுதாயம் கூர்மையாக இருப்பது நல்லது. அதுவே அடுத்த தலைமுறைக்கான நமது வழிகாட்டுதலாகவும் இருக்கும். ஹிஜாப் தொடர்பான வழக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை […]
2022 மார்ச்
K.M.H. அபூஅப்தில்லாஹ் மறுபதிப்பு : இன்று இந்திய அளவில், ஏன்? சர்வதேச அளவில் முஸ்லிம்களிடையே ஒற்றுமைக் கோஷம் வலுத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டும், ஒன்றுபட வேண்டும் என்ற கூக்குரலே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. வார, மாத இதழ்களும் ஒற்றுமை பற்றி தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டன. ஆம்! இன்று முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் பல கூறுகளாகச் சிதறுண்டு கிடப்பதால், எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு இழிவும் கேவலமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. துன்பங்களும் தொல்லைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் […]
வழிகெட்டபிரிவுஇயக்கங்களைவிட்டும்நீங்கிதவ்பாச்செய்யுங்கள்! அஹமதுஇப்ராஹிம், புளியங்குடி இஸ்லாத்தில் முஸ்லிம்கள் ஏற்படுத்தி உள்ள பிரிவுகள் போதாதென்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராவுத்தர் நலப் பேரவை என்ற பிரிவானது ஒன்றுபட்ட இஸ்லாமிய சமுதாயத்தைப் பிளக்க வந்த கோடாரி. இஸ்லாம்என்றவலுவானமரத்தைவெட்டவந்திருக்கும்கோடாரிகள், இஸ்லாத்தில்பிரிவுகளே : இயக்கங்கள், தரீக்காக்கள், மத்ஹப்கள், சுன்னத் ஜமாத்தினர், ஷியா பிரிவினைவாதிகள், பிரிவினை ஜமாஅத்துகள் இன்னும் பல உள்ளன. இவைகள் அனைத்திற்கும் இம்மை மறுமை வேதனை உறுதி என எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூல் அல்குர்ஆனில் கூறுகின்றான். ஆதாரம் (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் […]
ஹிஜாப்என்றபெயரில்முகம்மறைத்தல்! அபூஹனிபா, புளியங்குடி முகத்திரைஎங்கள்உரிமை : ஹிஜாப் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஹிஜாப்புடன் தங்கள் முகத்தையும் சேர்த்து மறைத்து கொண்டு பொது இடங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஹிஜாப்புடன் தங்கள் முகத்தையும் மறைத்துக் கொண்டு உணவ கங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்கி றார்கள். அவ்வாறு செல்லும் பெண்களை, பிற மக்கள் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு அவர்களின் முகத்தையும் சேர்த்து மறைக்கச் சொல்கிறது. […]
நபித்தோழியர்களின்தியாகங்கள்! உம்முமுஃப்லிஹ் உலகில் வாழும் எந்த மனிதராக இருந்தாலும், அவரது வாழ்வில் தவ்ஹீத் மற்றும் சுன்னாஹ் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து பயன்பாட்டிற்கு வந்தால்தான் அவர் இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக ஏற்று அதனடிப்படையில் வாழ்கிறார் என்று பொருள். இஸ்லாமிய அடிப்படையான தவ்ஹீத், அதாவது ஏகத்துவம் அதன் அஸ்திவாரமாகவே இருக்கிறது. ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டும் வணக்கத்திற்குரியவனாக தன் முழு மனதாலும் ஏற்று, அவனது கட்டளைகளுக்கும், அவனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது வழிகாட்டல்களுக்கும் கட்டுப்படும் எந்தவொரு மனிதனும் சத்திய […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள்இறுதிஇறைநூலை! ஷரஹ்அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… இறுதி விசாரணை நாளில் விசாரணைக் கூண்டில் இறை தூதர்கள் உலக மக்கள். (படைத்த) ஒரேஇறைவன்கூறுகிறான் : யாருக்கு இறைதூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டனரோ அவர்களிடம் நாம் நிச்சயமாக விசாரணை செய்வோம். அத் தூதர்களிடமும் நிச்சயமாக நாம் விசா ரணை செய்வோம். (இறைநூல்:7:6) அந்நாளில் மக்களை அல்லாஹ் அழைத்து, […]
நல்லதுஇருந்தால்அதனைஎடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர். பிப்ரவரி 2022 தொடர்ச்சி… “மதீனா வாழ்வின் ஆரம்ப காலத்தில் யூதர்களின் கிப்லாவை முன்னோக்கிய அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள்” இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டம் அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டம் தங்கியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஅபா ஆலயமாக இருக்கவேண்டும் […]
ஃபஜ்ர்தொழுகையின்சிறப்புகள்! அல்கோபர்அழைப்பகம் சான்றுபகரும்தொழுகை : (நபியே!) சூரியன்(உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (லுஹ்ரு), அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலைநிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலை நிறுத்துவீராக), நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாக இருக்கிறது. திருக்குர்ஆன் 17:78 பகல்மற்றும்இரவுநேரவானவர்கள்சந்தித்துக்கொள்ளும்தொழுகை : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனியாகத் தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்து ஏழு மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று […]
வரும்பொல்லாங்குஎல்லோர்க்கும்தான்! அந்த ஒரே இறைவனின் பெயரால்… வரும்பொல்லாங்குஎல்லோர்க்கும்தான்: நீங்கள் ஒரு சோதனை, வேதனையைப் பற்றி அஞ்சுங்கள். அது உங்களில் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை மட்டுமே தாக்காது. மற்றவர்களையும் தாக்கும்… (இறைநூல் : 8:25) அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களின்எச்சரிக்கை : c எனது சமுதாயத்தாரிடையே பாவங்கள் மலிந்துவிட்டால் அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தன்னிடம் இருந்து வேதனையை அனுப்புவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். c அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களிடையே நல்லவர்கள் இருக்கமாட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு […]
அபூஅஸீம், இலங்கை சோதனைகளின்போதுபொறுமைகொள்ளல்வேண்டும் : இறை நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; சோதனைகளின்போது, இன்னல்களை) சகித்து(ப் பொறுத்து)க் கொள்ளுங்கள்; (எதிரிகளுக்காக உங்களுக்கிடையில் ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:200) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நபியாக அறிமுகமாகி அழைப்புப் பணியை ஆரம்பித்த ஆரம்பக்காலகட்டத்திலிருந்தே எதிர்ப்பலைகள் எழ ஆரம்பித்தன. பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல், என இதுபோன்ற இழிசெயல்களால் குறைஷியர்கள் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினார்கள், அற்பமான வசைச் சொற்களால் […]
அறிந்துகொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. மனிதன் வளரும்போது ஏற்படும் ஆசைகள் எத்தனை?1. பொருளாசை, 2. நீண்டநாள் வாழ வேண்டும். புகாரி : 6421 2. யார் பூமியில் புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்பவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்?அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர். அல்குர்ஆன் 4:100 3. பெண்கள் வியத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?நல்லவிதமாக நடத்துங்கள். புகாரி:3331 4. பெண்களில் கண்ணியமானவர் என அறியக் கூடிய வழி என்ன என அல்லாஹ் […]
மத்ஹபுகள் முதல் மன்றங்கள் வரை தனி அமைப்புகள் நபிவழியா? கடந்த கால வரலாற்றில் மனித சமுதா யம் வழி தடுமாறிச் செல்லும்போது, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய “நடுநிலைச் சமுதாய”மாகிய முஸ்லிம்களில் பெரும்பாலோர் தமது பணிகளை செய்யத் தவறிய போதெல்லாம், முஸ்லிம்களை தட்டியயழுப்பி குர்ஆனைப் படித்து விளங்கி செயல்படவும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பற்றிப் பிடித்திடவும் நீண்ட நெடுங்காலமாக பல மார்க்க அறிஞர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். தூய இஸ்லாத்தைப் பேணி நடந்து நீதி நெறி ஆட்சி செய்த கலீஃபாக்கள் முதல், […]
அல்லாஹ்கற்றுத்தரும்அழகியபிரார்த்தனைகள்! நூருன்னிஸா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப் பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப் பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : பிப்ரவரி 2022 இதழ், பக்கம் 32ல், நபி (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்க மறுக்கும் “காதியானிகள்’ நபி(ஸல்) அவர்களின் இறுதி உரை முதல் அத்தனை நபி மொழிகளையும் ஏற்க மறுக்கும் “ஹதீத் மறுப்பாளர்கள்’ மேற்படி இருசாராரும் நபி(ஸல்) அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலதை ஏற்கிறார்கள் பலதை மறுக்கிறார்கள். முழுமையாக ஏற்றுக்கொள்ளாத இவர்களை பின்பற்றி தொழுவதை நியாயப்படுத்திட இவர்களை ஹனபியாக்களோடும் ததஜவினரோடும் ஒப்பிட்டு நியாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. அபூநபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நபி(ஸல்) அவர்களை […]