2024 ஆகஸ்ட்

தலையங்கம் : மதுவும்! சூதும்!! பொதுவாக மது, சூது இவைகள் இரண்டும் தீமையானது என்பது எல்லோரும் அறிந்தே ஒன்று. அவ்வாறுயிருந்தும் அரசாங்கம் மதுவையும், சூதையும் முற்றிலுமாக தடை செய்ய மறுக்கிறது. அதாவது “மதுவினாலும், சூதுவினாலும் கிடைக்கக் கூடிய வருமானத்தால்‘ அரசே அதை நடத்தவும் செய்கிறது. ஆனாலும் பெயர் அளவிற்கு, “குடி குடியைக் கெடுக்கும்‘ “குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்‘ என்றும் கூறுகிறது.  அது  மட்டுமல்ல; “மது நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு‘  என்றும்  விளம்பரமும்  செய்கிறது. அதுவும் […]

ஆலிம்  எனத்  தனிப்பிரிவு  இஸ்லாத்தில்  உண்டா? அபூ  அப்தில்லாஹ் ஜூலை  மாத  தொடர்ச்சி… உலகியல் துறைகளில் 5% அவற்றில் கற்றுப் பட்டங்கள் பல பெற்று எஞ்சியுள்ள 95% மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை இன்று கண் கூடாகக் கண்டு வருகிறோம். சாதாரண சளி, காய்ச்சலுக்காக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஓரிரு மாத்திரையில் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்தாமல், எத்தனை வகை டெஸ்ட்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்? ஒருசில மருத்துவர்களுக்கு அப்படி பிரிஸ்கிரிப்சன் […]

நீங்கள் தான் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழிகெட்டுப் போனார்களா? S.H. அப்துர் ரஹ்மான் தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த இறைநூலை இறக்கி வைத்தவன். பெரும் பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழவேண்டும்  என்பதற்காக! அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும் அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை. மேலும், அவன் […]

முன் ஸுன்னத் தொழுகையும்! முஸ்லிம்கள் செய்யும் தவறும்! N. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு இஸ்லாம் மார்க்கத்தில் வேறு எந்த வழிபாட்டிற்கும் இல்லாத உயரிய நிலை தொழு கைக்கு மட்டுமே உண்டு. வழிபாடுகளில் முதன் முதலில் இறைவனால் கடமையாக்கப் பட்டது தொழுகைதான், அது மட்டுமல்ல நாளை (மறுமையில்) நம்மிடம் (மனிதர்களிடம்) நடத்தப்படும் முதல் விசாரணை தொழுகையை குறித்துதான். மேலும் இறை நிராகரிப்பின்பால் இட்டுச் செல்லும் ஒரே செயல் தொழுகையைப் புறக்கணிப்பதுமாகும். இத்தகைய பல சிறப்புக்குரிய தொழுகை மிக சரியானதாக […]

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024  ஜூலை  மாத  தொடர்ச்சி… தொடர்ந்து அவர் “ஒருவரிடம் ரமழான் மாதம் வந்து சென்றுவிட்டது. ஆனால் (அவர் நோன்பு நோற்காததால்) அவரது பாவம் மன்னிக்கப்படவில்லை. அவரது மூக்கும் மண்ணைக் கவ்வட்டும்‘ என்று கூறி என்னை ஆமீன் சொல்லும்படி சொன்னார். நான் ஆமீன் என்றேன். பின்னர் அவர் “தமது பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ […]

நம் வீட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்? அ. ப. அகமது, புதுக்கோட்டை மறு பதிப்பு : “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்‘ என்று சொல்வார்கள். குழந்தைகளை உருவாக்கும் பல்கலைக் கழகம் தாய் என்றும் சொல் வார்கள். மேலும் இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியமான அந்தஸ்தை வழங்குகிறது என்றும் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் எப்படி தமது மனைவி, மக்களிடம் அல்லது தாயிடம் நடந்து கொள்கிறார்கள்? மிகமிகச் சொற்ப மானவர்களைப் பற்றி இங்கே எழுதவில்லை! […]

மனிதர்களுக்கான எச்சரிக்கை! (WARNING) N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் இரண்டு விதமான செயலில் ஈடுபடுகிறார்கள் அல்லது இரண்டும் கலந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இரண்டுவிதமான செயல்கள் என்னென்ன? ஒன்று : நற்செயல்கள் (நல்லது) மற்றொன்று : தீய செயல்கள் (கெட்டது) பொதுவாக நற்செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடக்கின்றன. (சில செயல்கள் மட்டும் மறைவாக நடக்கும்) அதுபோல் தீய செயல்கள் அனைத்தும் மறைவாகவே நடக்கின்றன. (ஒரு சிலர் மட்டும் வெளிப்படையாகவே  நடத்துகின்றனர்) நற்செயல்கள் அனைத்திற்கும் இவ்வுலகிலும், […]

ஏன் முடியாது? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் ஏன் முடியாது? எப்படி முடியும்? என ஏளனத்தோடும் கேட்பவர்களும், எரிச்சலோடு கேட்பவர்களும் முன்பும் இருந்தார்கள். அது என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தையும், யூனியன் பிரதேசங்களையும் எப்படி ஒன்று சேர்த்து ஒரே நாடாக கொண்டுவர முடியும் என்று அன்று கேட்டார்கள். அப்படியே ஒன்றாக ஆனாலும் ஒன்றுபட்டு இருக்குமா? அது நிலைக்குமா? என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் அன்றைய தலைவர்களிடம் இருந்த தேசபக்தியின் காரணமாக எல்லாவிதமான பிரச்சனைகளையும் ஓரம் கட்டிவிட்டு ஒற்றுமையே முக்கியம் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குபவரின் நிலை என்ன என அல்லாஹ் கூறுகிறான்? மறுமையில்கொழுத்துவிட்டுஎரியும்நெருப்பில்புகுவார்கள். (அல்குர்ஆன் 4:10) 2. அல்லாஹ்வின் சாபமும், மிக கெட்ட வீடும் யாருக்கு என்று அல்லாஹ் கூறுகிறான்? பூமியில்விசமம்செய்பவர்களுக்கு. (அல்குர்ஆன் 13:25) 3. கைத்தடியை பாம்பாக மாறச் செய்த சம்பவம் யாருடைய காலத்தில் என அல்லாஹ் கூறுகிறான்? மூஸா(அலை) அவர்கள் காலத்தில். (அல்குர்ஆன் 27:10) 4. யாரைப் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ்  கூறுகிறான்? உங்களிடம்  ஒரு  கூலியும்  […]

மனம்! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலகிலேயே  மிக  வேகமானது:  ராக்கெட்டா? ஒலியா? ஒளியா?  காற்றா? இவைகள் எல்லாம் இல்லை. இருப்பினும் நம் கண் முன்னால் நடக்கும் இவைகளின் செயல்களால் இவைகள் தான் வேகமானது என பெரும்பாலோர் நினைக்கிறோம். ஆனால் உண்மை இது வல்ல. உண்மை என்னவென்றால் மேற்கண்ட எல்லாவற்றையும் விட வேக மானது நம் மனமே! ஆம்! நினைத்த சில நொடிகளில் எங்கெங்கோ சென்றுவிட்டு திரும்பி விடுகிறது. அத்துனை வேகமானது நமது மனம். அதுமட்டுமல்ல இன்னும் ஏராளமான […]

புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா? ஜி. ஜலாலுதீன், பாண்டிச்சேரி மறு பதிப்பு : புகை  பிடிப்பதை  இஸ்லாம்  தடை செய்கிறதா? புகை பிடிப்பது வெறுப்பிற்கு உரியது என்று ஒப்புக்கொண்டாலும், அதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று முஸ்லிம்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், எல்லாவற்றுக்கும் இறைவனாகிய அல்லாஹ், மனிதனுக்கு அளித்த இறுதி வழிகாட்டுதலாகிய குர்ஆன் கூறும் கட்டளைகளின் அடிப்படையில் பார்க்கும்போது புகை பிடிப்பது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று இஸ்லாம் கட்டளையிடுவது  தெளிவாக  விளங்கும். புகையிலை  எனும்  […]

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024  ஜூலை  மாத  தொடர்ச்சி… இறை வசனங்களை மாற்றியும், மறைத்தும், திரித்தும், வளைத்தும், குழறுபடி செய்தார்கள்: இறை வேதங்களின் வேத வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றியும் அல்லாஹ்வின் வசனங்களைத் திரித்தும் அவற்றின் உண்மையான கருத்துக்களை மறைத்தும் நாவுகளை வளைத்து குழறுபடிகள் செய்து கைவரிசை காட்டினார்கள். (2:79,159,174, 3:78,187, 4:46, 5:13,14) […]

விடியலுக்கு முன் எழு! முன்னிரவில் தூங்கு!! M. சையது முபாரக், நாகை. நம்மில் பலருக்கு “அதிகாலை‘ என்பதே தெரியாது. சூரிய உதயத்தைப் பார்க்காத ஒரு சமுதாயமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்குச் செல்ல காலை 9 மணிக்கு அவசர அவசரமாக எழுவோம். அன்று முழுவதும் மனப் பதட்டத்துடன் இருப்போம், விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம்; பகல் உணவிற்கு எழுந்தாலே ஆச்சரியம் தான். காலை 9 மணிக்கு எழுந்து அவசர அவசரமாக ஓடுவதாலும், லுஹர் நேரத்தில் […]

ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்! அபூ இஸ்ஸத், இலங்கை 2024  ஜூலை மாத  தொடர்ச்சி… குழந்தைகளுக்குப் பாலூட்டும் கால அளவிலும்: மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். (அல்குர்ஆன் 46:15) இதன்படி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியிருப்பதாவது: ஒரு பெண் ஒன்பது மாதத்தில் பிள்ளை […]