2024 செப்டம்பர்

தலையங்கம் : வளம் நாடு!-வய(ல்)நாடு! வாழ்வும்!-வீழ்வும்! சென்ற ஜூலை 31ம் தேதி வயநாட்டில் நடந்த நிலச்சரிவு. ஆரம்பத்தில் BREAKING NEWS ஆக  இருந்தது. பிறகு  அதுவே  TRENDING NEWS ஆக  ஆனது. இப்போது அது OLD NEWS ஆக  மாறிவிட்டது.  அதாவது சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக கடந்து போவது என்பது மனித இயல்பில் அரிதாக இருந்தது. ஆனால் சுமார் 2000மாவது ஆண்டுக்கு பிறகு டி.வி. மற்றும் அனைத்து வகையான ஊடகங்களின் (MEDIA) வளர்ச்சியால்  […]

புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாகும் காரணம் என்ன? அபூ கதீஜா அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்) வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை  மிகவும்  கெட்டவை.    (அல்குர்ஆன் 9:9) நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (புரோகிதர்களான) பாதிரிகளிலும், துறவிகளிலும் அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் […]

சொந்த வீடா? வாடகை வீடா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மனிதர்கள் முதல் அனைத்து வசதிகளையும் பெற்ற மனிதர்கள் வரை சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் இலட்சியத்தில் ஒன்றாக உளளது. இந்த இலட்சியம் நினைவாகிப் போனவர்களின் எண்ணிக்கையை  விட  கனவாகப்  போனவர்களின்  எண்ணிக்கையே  அதிகம். “இளமையோ / முதுமையோ,  பகலோ / இரவோ,  தனியாகவோ / துணையாகவே, வசிப்பதற்கு  ஒரு  வீடு  அவசியம்  தேவை. 1. உண்ண  உணவும், 2. உடுத்த  […]

எப்படி முடியும்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, முஸ்லிம்கள் சோதனையான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மீது அமெரிக்கா, சியோனிசம் (யூதர்கள்) ஏகாதிபத்தியவாதிகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். அதுபோல் இந்தியாவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம்கள் மீது பன்முகத் தாக்குதல்  நடத்துகின்றனர். மேலும் முஸ்லிம்களில் உள்ள மிகச் சிறிய தீவிரவாத சிந்தனையாளர்களின் நடவடிக்கையின் காரணமாகவும் முஸ்லிம்கள் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவிக்கின்றார்கள். இறைவன் தன் வழிகாட்டும் நூலில் கூறிய கீழ்கண்ட வசனம் இந்த சூழ்நிலையில் […]

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும்— அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. எனது தந்தை அபூதாலிப் இறந்தபோது நான் நபி(ஸல்)அவர்களிடம் நபியே! வயது முதிர்ந்தவரும் முஸ்லிம் அல்லாதவருமான உங்களுடைய பெரிய தந்தையார் அபூ தாலிப் இறந்துவிட்டார் என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள், நீர் சென்று உம்முடைய தந்தையை அடக்கம் (மட்டும்) செய்துவிட்டுப் பின்னர் வேறெந்த (விதமான) வேலையிலும் ஈடுபடாமல் அப்படியே என்னிடம் வாரும் என்று  […]

இரவு உணவு எப்பொழுது? எது? M. சையது முபாரக், நாகை. நாம் உட்பட பல உயிரினங்கள் விடிவதற்கு முன் விழித்து, சூரியன் மறைந்தபின் முன்னிரவில் உறங்கும் விதத்தில் அல்லாஹ் வால் படைக்கப்பட்டிருக்கிறோம். அல்லாஹ் சிலவற்றை இரவில் விழித்து பகலில் தூங்கக் கூடியதாக படைத்திருக்கின்றான். நாம் என்று மின் விளக்குகளை கண்டுபிடித்தோமோ அன்றிலிருந்து இயற்கையை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன், ஆரவாரத்துடன் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து விட்டோம். அதன் விளைவாக உடல் உபாதைகளைப்  பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  இரவு  உணவு  எப்போது? […]

அறிந்து கொள்வோம்!  மர்யம்பீ, குண்டூர் 1. அநாதைகளின் சொத்தை அநியாயமாக விழுங்குபவனின் நிலை என்னவாகும் என  அல்லாஹ்  கூறுகிறான்? அவனதுஉணவு (மறுமையில்) நெருப்பாகும்.  (அல்குர்ஆன் 4:10) 2. கருக்கலைப்பு (குடும்பக் கட்டுப்பாடு) செய்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறுவது என்ன? வறுமைக்குஅஞ்சிகுழந்தைகளைகொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 6:151,17:31) 3. வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு என்று அல்லாஹ்  கூறும்  வசனம் எது?  அல்குர்ஆன் 35:1 4. ஏழு இரவுகள், எட்டு பகல்களும் தொடர்ந்தாற் போல் வேதனை பெற்ற சமூகம் எது என்று  அல்லாஹ்  […]

(கடவுளை) இறைவனை பார்க்கவும், பேசவும் முடியுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இறைவனை மனிதர்கள் நேரிடையாக பார்க்கவும், பேசவும்  முடியாதா? இந்த கேள்வி ஒன்றும் புதிது அல்ல; இது காலம்–காலமாக கேட்கப்பட்டு வருவது தான். இதற்கு காரணம் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்பக்கூடியவர்களாக சிலர் இருந்ததால், இருப்பதால்  வந்தது. இந்த கேள்வியை இறைவனை நம்பாதவர்கள் மட்டும் கேட்கவில்லை. இறைவனை நம்பக்கூடியவர்களுக்கும் இந்த சந்தேகம்  உள்ளது. இறைவனை நாம் கண்ணால் இந்த உலகில்  பார்க்க  முடியாது. “பார்வைகள் அவனை அடையமுடியா; […]

பரிந்துரை (­ஃபாஅத்) RECOMMENDATIONபயன் தருமா? பயன் தராதா? A.N. திருச்சி இறைநூலான குர்ஆன் என்பது அல்லாஹ் வின்  திருவாக்கு!  எவ்வாறு  என்றால், “நமது அடியாருக்கு(முகம்மது நபிக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, அதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உதவியா ளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்‘’ (அல்குர்ஆன் 2:23) மேற்கண்டவாறு குர்ஆன் (இறைநூல்) சவால் விட்டு சுமார் 1445 ஆண்டுகள் கடந்து 1446ம் ஆண்டு நடக்கிறது. […]

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024  ஆகஸ்ட்  மாத  தொடர்ச்சி… அல்லாஹ் அருளிய தூய இறைநூலை மூடி மறைத்தார்கள்: அல்லாஹ் அருளிய இறைநூலை மூடி மறைத்து அதற்குப் பதிலாகச் சொற்ப விலையைப் பெறுவோர் தங்களது வயிறு களில் நெருப்பைத் தவிர வேறெதையும் உட்கொள்வதில்லை. (2:174) என்பதற்கு, அரபு மக்களின் மூதாதையர்களைப் புகழ்ந்து பேசி அவர்களிடமிருந்து பெற்று வந்த அற்பமான […]

திரைமறை வாழ்க்கை! (ஆலமுல் பர்ஸக்) அபூ நாஃபிஆ, உடன்குடி வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான கலை. அப்படிப்பட்ட கலையை நுட்பமாக முழுவதுமாக அனுபவித்தால் தானே அதன் அருமை தெரியும்…? வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத்தானே…? நாம் வாழக்கூடிய குறைந்த அளவு காலத்தில் நம்முடைய விருப்பப்படி என்னென்ன விதமான ஆடை களை உடுத்த வேண்டுமோ அதை எல்லாம் உடுத்தி, எந்தெந்த இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று, அனைத்து சுகங்களையும் அனுபவிக்கலாம். நல்ல வழியில் சம்பாதித்தாலென்ன, பிறரிடம் கொள்ளையடித்து சம்பாதித்தாலென்ன […]

மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும், துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்!  அபூ அப்தில்லாஹ் அறியாமை நிறைந்த சமுதாயங்களில் மக்கள் உறுதி வாய்ந்தவர்களாகக் காணப் பெற்றாலும் அவர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள் தாம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களின் பலகீனத்தை எதிர்த்துச் செயல்பட முடியாது. மிகவும் கண்டிப்பான கொள்கை களைக் கடைப் பிடிப்பவர் என அறியப்பட்ட வரும் கூட தன்னுடைய நலன்கள் கேள்விக் குறிக்கு ஆளாகும்போது தன்னுடைய விதிகளை மீறி விடுவார். நிர்ப்பந்தம் ஏற்படும்போது, தொல்லைகள் எழும்போது, […]