தலையங்கம் : மழை! வரமா? சாபமா? தற்பொழுது மீடியாக்கள் மூலம் முக்கிய செய்தியாக இருப்பது “மழை‘யைப் பற்றியதாகவே உள்ளது. அதில் மிகைப்படுத்தப்பட்ட செய்தியும் உண்டு, மறைக்கப்பட்ட செய்திகளும் உண்டு. எனவே மழையைப் பற்றி மனித அறிவும், இஸ்லாம் மார்க்கமும் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். பொதுவாக உலக நாடுகள் முழுவதும் மழைக்காலம், குளிர்காலம், கோடைகாலம் ஒரேமாதிரியாக இருக்கின்றதா என்றால் இல்லை. சில நாடுகளில் குறிப்பிட்ட காலங்கள் மட்டும் முறையாக மழை பெய்யும், சில நாடுகளில் வருடத்திற்கு ஒரு […]
2024 நவம்பர்
வாழ்க்கைப் பரீட்சையில்…தேறுபவர்கள் யார்? அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : உங்களில் அழகிய செயல்கள் செய்பவர்கள் யார் என்பதை பரீட்சித்து அறிவதற்காக மரணத்தையும், வாழ்வையும் (அல்லாஹ்) படைத்தான் (ஆட்சி: 67:2) (மேலும் பார்க்க : 5:48, 6:165, 11:7, 16:92, 5:94, 27:40, 8:57) இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள், மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை அல்லாஹ் கொடுத்துள்ள இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியும். பரீட்சை […]
மனிதனுக்கு இறுதி விசாரணை உண்டா? S.H. அப்துர் ரஹ்மான் இதற்கு பதில் ஆமாம் என்பதுதான். இறுதி இறைநூல்படி மனிதனுக்கு உலக இறுதி நாளில் விசாரணை இருக்கிறது. இறுதி இறைநூல் பல இடங்களில் இந்த விசாரணையை குறிப்பிடு கிறது. அதை “இறுதி நாள்‘ அல்லது “நியாயத் தீர்ப்பு நாள்‘ எனவும் குறிப்பிடுகிறது. அன்று ஒவ்வொருவரின் செய்கைகள், அதாவது நன்மைகள் மற்றும் தீமைகள், விவரமாக கணக்கெடுக்கப்படும். அவர்களின் செயல்களின் அடிப்படையில், அந்த இறைவன் அவர் களுக்கு வெகுமதி அல்லது தண்டனை […]
அல்லாஹ்வின் அருட்கொடையில் எது உயர்வானது? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக (நமக்காக) அல்லாஹ் பயன்படச் செய்ததையும் (வசப் படுத்தி தந்துள்ளதையும்) தனது அருட் கொடைகளை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வாரி வழங்கியிருப்பதை யும் நீங்கள் காணவில்லையா? அறிவோ நேர்வழியோ இறைநூலின் ஞானமோ இவை எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்வோர் மனிதர்களில் (சிலர்) உள்ளனர். (அ.கு. 31:20) மேற்கண்ட வசனப்படி இறைவன் நமக்கு எண்ணற்ற எண்ணிக்கையில் அடங்காத பலவற்றை அருட்கொடையாக […]
அத்துமீறும் சுதந்திரம்! ரேஷ்மா யாஸின், திருச்சி இந்த உலகத்தில் ஒரே முகம் கொண்ட மனிதர்கள் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பழக்க வழக்கம், ஏன் ஒரே உணவு முறை கூட இல்லை. இன்னும் எத்தனையோ விசயங்களில் மனிதர்களாகிய நாம் மாறுபட்டு தான் இருக்கிறோம். ஆனால் எல்லா மொழிகளிலும் எல்லா கலாச்சாரங்களிலும் எல்லா மனிதர்களிடத் திலும் எதிர்பார்க்கின்ற ஒரு பொதுவான பண்பு தான் ஒழுக்கம். இதற்கு மதம், மொழி, இனம், நிறம் ஏற் றத்தாழ்வு என்ற எந்த […]
நீங்கள் நல்லவரா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக மக்களில் பெரும்பா லோர் நல்லவராக நடிக்கின்றார்கள். ஆனால் நல்லவராக வாழ்வதில்லை. அதனால்தான் எங்கு பார்த்தாலும் (ளீ.ளீ.வீ.V.) கண்காணிப்பு கேமிரா, பொருத்தப்பட்டுள்ளது. (ளீ.ளீ.வீ.V.) கேமிராவிற்கு பயப்படுகின்ற அளவிற்கு இறைவனுக்கு பயப்படுவதில்லை. ஒருவரைநல்லவர்எனதீர்மானிப்பதற்குமக்கள்வைத்துள்ளஅளவுகோல்: 1. அவர் மிகப்பெரிய ஆன்மிகவாதி, 2. அவர் நெருங்கிய உறவினர், 3. அவர் பெரும் செல்வந்தர், 4. அவர் பெரிய தொழில் அதிபர், 5. அவர் ஆளும் கட்சிக்கு நெருக்க மானவர், 6. அவர் நீண்டகால நெருங்கிய […]
சுய ஒழுக்கம் தான் அவசியம் தேவை! R. அமீருன்னிஷா, திருச்சி இன்று ஒரு மனிதன் தான் தனித்தோ, ஒரு குடும்பமாகவோ, சமூகமாகவோ, ஒரு நாடாகவோ வாழ்கின்ற சூழ்நிலையில் சந்தித்து வரும் கஷ்டங்களுக்கும், தோல்வி களுக்கும், சவால்களுக்கும் முக்கிய கார ணம் ஒழுக்கமின்மையே. புற்றுநோய் போல் பல இடங்களில் ஒழுக்க கேடு பரவி இருக்கிறது இவற்றை நாம் கண்டும் காணா மலும் இருந்தால் அழிவை தரும் சந்ததி களை நம் கண் முன்னே பார்க்க நேரிடும். மக்கள் தங்கள் […]
கல்வி! கல்வி!! கல்வி!!! இஞ்சினியர் பசீர் அஹமத் அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே! ஒரு முக்கியமான நோக்கத்திற்காக உங் களுடன் சில வியங்களை பகிர்ந்து கொள் ளலாம் என நாடியதால் இந்த கட்டுரை. உலகெங்கும் சுமார் 250 கோடி முஸ்லிம் கள் வாழ்வதாக ஒரு கணக்கு சொல்கிறார் கள். அதாவது உலகில் கால்வாசி பேர் முஸ்லிம்கள் இந்தியாவில் சுமார் 20 கோடி தமிழகத்தில் 1 கோடி முஸ்லிம்கள் இதுவும் அநேக சகோதரர்கள் அறிந்திருக்கக்கூடும். கடந்த 14 நூற்றாண்டுகளாக இஸ்லாம் […]
உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 அக்டோபர் தொடர்ச்சி… இரத்தபந்த உறவினர்களுக்கும் உபகாரம் செய்தல் : “அல்லாஹ்வையே‘ வழிபடுங்கள்; அவ னுக்கு எதனையும் இணை கற்பிக்காதீர்கள் என்று சொன்ன அல்லாஹ் அடுத்து இந்த வசனத்தில்; பெற்றோருக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகின்றான். அடுத்ததாக, உறவினர்களுக் கும் உபகாரம் செய்யுங்கள் என்று சொல் கின்றான். இது குறித்து இறைத்தூதர்(ஸல்) […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு அக்டோபர் தொடர்ச்சி… கள்ள நோட்டு செல்லாத நோட்டு : 100 ரூபாய் நோட்டைப் போலவே, எவ் வித வேறுபாடும் இல்லாமல், ஒருவன் ஒரு 100 ரூபாய் நோட்டைத் தயார் செய்தால் அதை நாம் சரி காண மாட்டோம். அதைக் கள்ள நோட்டு என்றே சொல்லித் தயார் செய்தவனை அரசாங்கம் தண்டிக்கும். அது நல்ல நோட்டைப் போல்தானே இருக்கிறது என்று எவரும் வாதிடமுடியாது. அளவைகளுக்கு வியாபாரிகள் முத்திரை இட்டுக் கொள்ள வேண்டும். இது […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 அக்டோபர் மாத தொடர்ச்சி… ஏராளமான இறைத்தூதர்களைப் படுகொலை செய்தார்கள் : தூய மார்க்கத்தின் தூண்களான இறைத் தூதர்களை ஆரம்பத்தில் குறை கூறிக் கொண்டிருந்த அவர்கள் இறுதி யில் அந்த நபிமார்களையே கொலை செய்கின்ற அளவுக்குச் சென்றார்கள். இதில்; “நபி யஹ்யா(அலை) அவர்களை யும் இஸ்ரவேலர்களான யூதர்கள் படு கொலை செய்தார்கள். நபி […]
வாழ்வு மேம்பட வாசிப்போம் புத்தகங்களை! M. சையத் முபாரக், நாகை. நிகழ்காலத்தில் நாம் நமக்கு அருகில் நடக்கும் சில சம்பவங்களை நேரிலும், டி.வி மூலமும் மட்டுமே பார்க்க முடியும். தொலைவில் நடக்கும் நிகழ்வுகளை, வரலாற்றுச் சம்பவங்களை, முன்னோர்களின் பண்பாட்டுக் கலாச்சாரங்களை நம் கண் முன் கொண்டு வருவது புத்தகங்களே. அதை நாம் வாசித்து அறிகிறோம் அல்லது கதை சொல்வது மூலம் தகவலைப் பெறுகி றோம். முன்பு தாத்தா, பாட்டி கதை சொல்பவராக இருந்தனர். ஆனால், இன்று கதை […]