மூன்று நாள் பெருநாள் வருவது! மூணின் (MOON) தவறா? முஸ்லிம்களின் தவறா? S.H. அப்துர் ரஹ்மான் அந்நஜாத்தில் பிறை பற்றிய கட்டுரைகள், சிறப்பிதழ்கள் ஏற்கனவே பலமுறை வந்திருக்கின்றன. அவற்றை படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல! அந்நஜாத்தில் எது வந்தாலும் படிக்க போவதே இல்லை என்ற முடிவில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அந்நஜாத்தை யாருக்கும் தெரியாமல் மறைவாக படிக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். கட்டுரைகள் பல வரலாம்; ஆனால் மாறுதல் எப்போது வரும் என்பதை அல்லாஹ்வே அறிவான். தமிழகத்தில் […]
2024 பிப்ரவரி
தலையங்கம் : பாபர் மஸ்ஜித்தும்! இராமர் கோவிலும்!! இராமர் கோவில்… மஸ்ஜித் இடித்த இடத்தில் கோவில் கட்டவும், திறப்பு விழா காணவும் இந்தியா வில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதற்காக முயற்சியும், செலவும் செய்தார்கள். பாபர் மஸ்ஜித்…. அதை இடித்ததிலிருந்து முஸ்லிம் மத இயக்கவாதிகள் தங்கள் இயக்கங்களை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து முஸ்லிம்களிடம் வசூல் செய்து வந்தார்கள். தங்கள் பிரிவு இயக்க பள்ளிவாசல்களை கட்டி இந்த சமுதாயத்தின் ஒற்றுமையை குலைத்து ஒரு எம்.பி. […]
இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா? அஹமது இப்ராஹிம் உங்களில் அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்தவர், மனனமிட்டவர் இமாமுக்குத் தகுதியானவர் என நேரடியாக சொல்லப்பட்ட நபிமொழி உள்ளது. அம்ர் இப்னு சலிமா(ரழி) அறிவித்தார்: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் […]
ஏழைகளுக்குரியதை மோசடி செய்யாதீர்கள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : அவர்களுடைய செல்வத்தில் யாசிப் பவர்களுக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு. அல்குர்ஆன் 51:19 அவர்களுடைய பொருள்களில் யாசிப்போருக்கும், வறியோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. அல்குர்ஆன் 70:24 “எதைச் செலவு செய்ய வேண்டும்‘ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; “(உங்கள் தேவைக்குப்போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்‘ என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:219 அல்குர்ஆனில் கடமையான தொழுகை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ஜகாத்தும் வலியு றுத்திக் […]
மன அழுத்தத்திற்கு மாற்று வழி உண்டா? AN திருச்சி இன்றைய காலகட்டத்தில் “மன அழுத்தம்‘ என்பது அனைவரின் வாழ்விலும் விரும் பியோ, விரும்பாமலோ ஒன்றாக கலந்துள்ளது. உடலில் காயங்களால் ஏற்படும் வியாதிகளை கூட ஒருசில நாட்களில் கட்டு படுத்திவிடலாம். அவரவர்களுக்கு உள்ள உடல் வலிமையைப் பொறுத்து நாட்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆகலாம். ஆனால் “மன அழுத்தம்‘ என்றால் என்ன? என்று தெரிந்திருந்தால்தான் அதிலிருந்து விடுபட முடியும். பெரும்பாலோர் “மன அழுத்தம்‘ என்பது இதயத்தினால் மற்றும் மூளையினால் ஏற்படுகிறது […]
அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்! அபூ இஸ்ஸத், இலங்கை ஜனவரி 24 தொடர்ச்சி…. நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே: நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே அவனே (இந்)நெறிநூலை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். (அல்குர்ஆன் 7:196) என்று இறுதி இறைத்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது; அல்லாஹ்வே எனது பொறுப் பாளன் அவனே எனக்குப் போதுமானவன்; அவனே எனக்கு உதவியாளன்; அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்; அவனிடமே நான் அபயம் தேடுகிறேன்; அவனே எனக்கு […]
மனிதர்களை வேதனை செய்வதில்….இறைவனுக்கு என்ன லாபம்? N. மர்யம், ஒரத்தநாடு மனித வாழ்க்கை என்பது தொடர் பயணமாகும். ஒவ்வொரு மனிதனின் அவன் செய்த நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலனை அனுபவிக்கும் காலம் பயணத்தின் இறுதியில் நிச்சயம் உண்டு. அதாவது இறைவனின் ஏற்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் சந்தேகம் இருந்தால் மனித படைப்பைப் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். ஆரம்ப மனிதன் மண்ணிலிருந்தும், அடுத்த கட்டமாக […]
முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2024 ஜனவரி தொடர்ச்சி…. இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்களும் அவ்வாறே கூறினார்கள் : ஆகவே, அவள் வந்தபொழுது, உன்னுடைய அரியாசனம் இது போன்றதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள், “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது‘ என்று கூறினாள்; இந்தப் பெண் மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கி றோம் (என்று சுலைமான் கூறினார்) (அல்குர்ஆன் 27:42) இது சுலைமான்(அலை) அவர்கள் சொன்னதுதான் […]
பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை! அஹமத் இப்ராஹீம் பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் அல்லாஹ்வை யன்றி வேறு யாரையும் அழைக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18 உயிரற்ற கட்டிடம் ஒருபோதும் இணை வைக்காது. இப்படி இருக்க ஹனஃபி மத்ஹபு பள்ளி இணைவைக்கக்கூடிய பள்ளி. எனவே அங்கே தொழுவது கூடாது. எங்கள் தவ்ஹீத் பள்ளியில் தொழுங்கள் என சிந்திக்கத் தெரியாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தவ்ஹீத் புரோகிதர்கள் வழிகெடுத்து சமுதாயத்தை பல பிரிவுகளாகப் பிரித்து, வசூல் வேட்டை நடத்தி […]
மனிதர்கள் அந்த இறைவனையன்றி வேறு புகலிடத்தைக் காணவே மாடட்டார்கள்! S.H. அப்துர் ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும். அந்த ஒரே இறைவன் பெயரால்… இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்! “இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் அவர்களுக்கு நீர் கூறுவீராக! அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து பதராகி அவற்றைக் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : மனிதக் கருத்து மார்க்கமாகாது என்று தொடர்ந்து கூறி வரும் “அந்நஜாத்‘ ஹதீத் கலா வல்லுனர்கள், ஹதீத்களை தரம் பிரித்து கூறுவதை சரிகாண்கிறது. ஏற்றுக்கொள்கிறது. அவர்களின் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? அவர்களும் மனிதர்கள்தானே! M. அபூநபீல், தேங்காய்பட்டணம் தெளிவு: மேற்படி வாசகர் அந்நஜாத் பத்திரிக்கையானது இதர சமுதாய பத்திரிக்கைகள் போல் மனித சொந்த கருத்தை கூறாமல் ஆதாரபூர்வமான ஹதீத்கள் மட்டுமே அந்நஜாத் பத்திரிக்கையில் இடம்பெறும் […]