உண்மை பேசுக! இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களு டைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு அவற்றில் அவர் கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119) நேர்மையாக பேசுக!
பொதுவானவை
விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதா? “உலமாக்களின் அலட்சியமும், முஸ்லிம்களின் அறியாமையும்” ஜாபர் சித்தீக், கம்பம்
ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படிதான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.
அப்துல்லாஹ் இப்னு ஸபாவிலிருந்து அஹமது நிஜாத் வரை! S.ஹலரத் அலி, ஜித்தா
நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்! அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் படைப்பினங்கள் முஹிப்புல் இஸ்லாம்
H.நூருல் அமீன், ALAIN.UAE இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78)
இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிரதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள மூட நம்பிக்கைகள், அநாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்: E.M. அப்துர் ரஹ்மான், (நூரிய்யி, பாஜில் பாகவி) திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:- (1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல் (2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல். (3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: பெண் பிள்ளைகள் பெற்றெடுப்பதற்கு மனைவியை மட்டும் குறை கூறும் ஆண் ஆதிக்க வர்க்கத்தின் வாயடைக்க நல்லதொரு பதிலை தாருங்கள். பாத்திமா, திருவான்மியூர்.
அபூ உ வைஸ் ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர்களே! என்று உண்மையை உணரப் போகிறீர்கள்!
M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை. இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான். தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! இறை மறுப்பான (காஃபி)ரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (2:250) இந்தப் பிரார்த்தனையை பனூ இஸ்ரவேலர்களில் தாலூத்துடைய மக்கள் ஜாலூத்தை எதிர்கொண்டு போர் புரிகையில் கேட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான். மூஸா(அலை) அவர்களின் மறைவுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் வீழ்கின்றனர். அவர்களை நேர்வழிப் படுத்திச் செல்ல பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான். நேர்வழி செல்பவர்களுக்கும் வழிகேட்டிலிருப்பவர்களுக்குமிடையில் […]
அபூஅஹ்மத். பொட்டல் புதூர். (கேம்ப் K.S.A) முகல்லிது முல்லாக்கள் இட்டுக்கட்டப்பட்ட-பலவீனமான செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் சுய சிந்தனை இல்லாமல் அவைகளை நபிமொழி என்று நம்பியும் ஆதாரப்புர்வமான நபிவழிச் செய்திகளுக்கு அர்த்தம் என்ற பெயரில் பல அனாத்தங்களைச் சொல்லியும் மத்ஹபை நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றி வந்தார்கள்! வருகிறார்கள்!!
இஸ்லாமிய இறை நம்பிக்கை! இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க நெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம். இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் […]
பிரார்த்தனை (துஆ): (எங்களிறைவனே! உனது ஆணைகளை நாங்கள் செவி மடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே (பாவ) மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீள்வதும் உன்னிடமே. (அல்குர்ஆன் 2:285) (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம் “ஓசை தரும் கருப்பான மண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகிறேன்” என்றும், (15: 28) (நபியே! நினைவுகூறுவீராக!) நிச்சயமான நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; (38:71) “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, […]
மதங்களாலேயே நஷ்டம்! நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் […]
மர்ஹூம் (ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது. ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?”
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் மவ்லவி P.M.S.காசிமிய்யி, மன்யகரடிக்குளி, ஸ்ரீலங்கா வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக் கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: சவூதி அரேபியாவில் பெண்கள் கண்களைத் தவிர பிற பாகங்கள் அனைத்தையும் துணியினால் மறைத்து ‘ஹிஜாப்’ முறையை பேணி வருகிறார்கள். “முகத்தையும், கைகளையும் மறைக்க தேவையில்லை” அவ்வாறு மறைப்பது கண்டிப்பாக ‘பித்அத்து’தான் (அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள்) என்று தவ்ஹீது சகோதரர்கள் சிலர் வாதிடுகின்றனர்.இது சரியா? விளக்கம் கோருகின்றேன்.